நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே விமர்சனம்

கதையின் நாயகன் செந்தூர் பாண்டியன் படித்து முடித்து விட்டு ஊரை சுற்றி கொண்டு தனது நண்பர்களுடன் சிகரெட் பிடித்துக்கொண்டும் தண்ணி அடித்து கொண்டும் பொழுதை போக்கி வருகிறார் பேஸ்புக்கில் இருக்கும் பெண்களுக்கு ஹாய் மெசேஜ் அனுப்பி அவர்களை தனது வலைக்குள் விழ வைப்பது முழு நேர வேலையாக செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.அப்படி இருக்கையில் நாயகனுக்கு கதையின் நாயகி ப்ரீத்தி கரணின் நட்பு பேஸ் புக் மூலம் கிடைக்கிறது.அன்று இரவு ப்ரீத்தி கரணிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது, அவர் அவனிடம் மறுநாள் அவளுக்கு பிறந்த நாள் என்று கூறுகிறாள். செந்தூர் பாண்டியன் உடனடியாக அவளுக்கு ஒரு பரிசுடன் பிறந்த நாள் அன்று அவள் இடத்திற்கு வருவதாக கூறுகிறான். முடிந்தால்வா பார்க்கலாம் என்று ப்ரீத்தி கரண் கூறுகிறாள். அவளுடனான நட்பை காமத்திற்காக பயன்படுத்த நினைக்கும் செந்தூர் பாண்டியன் அவளை நேரில் சந்தித்து சர்ப்ரைஸ் தர தனது நண்பன் சுரேஷ் மதியழகனுடன் பைக்கில் செல்கிறார்.வந்ததும் ப்ரீத்தி கரணை தொடர்பு கொண்ட போது வீட்டில் யாரும் இல்லை, நீ வீட்டுக்கு வா என்று கூறுகிறாள்.இன்று நம் எண்ணம் நிறைவேற போகிறது என்ற சந்தோஷத்தில் அவளது வீட்டிற்கு செல்கிறான் செந்தூர் பாண்டியன். வீட்டில் ப்ரீத்தி தன்னுடைய பாட்டியுடன் இருப்பதை பார்த்து ஏமாற்றம் அடைகிறான். அதன் பின் ப்ரீத்தி தனது தோழிகளான பூர்ணிமா ரவி, தமிழ்செல்வி ஆகியோருடன் அனைவரும் சேர்ந்து காபி அருந்துகிறார்கள். அங்கிருந்து செந்தூர் பாண்டியனும்,ப்ரீத்தியும் தனியாக வெளியே செல்கிறார்கள். அங்கு செந்தூர் பாண்டியனின் எண்ணம் நிறைவேறியதா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.
செந்தூர் பாண்டியன் கதாபாத்திரம் பெண்களை ஏமாற்றுவதை இயல்பாகவும் அடுத்தவருக்கு வெறுப்பு வரும் அளவிற்கு தத்ரூபமாக நடித்துள்ளார்.
ப்ரீத்தி கரண் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
பிற கதாபாத்திரங்களான சுரேஷ் மதியழகன்,பூர்ணிமா ரவி,தமிழ்செல்வி, ஷிவானி கீர்த்தி,அபிஷேக் ராஜு,மாலிக், நாகராஜ்,எஸ்.கே.தாஸ்,எம். அமுதா ராணி, மினு வாலண்டினா ஆகியோரும் அவரவர் நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளனர்.
உதய் தங்கவேலுவின் ஒளிப்பதிவும் பிரதீப் குமாரின் இசையும் கதைக்கு பலம்.
இன்றைய காலகட்டத்திற்க ஏற்ற அவசியமான ஒரு கதையை மிகவும் அழகான முறையில் கூறிய இயக்குநர் பிரசாத் ராமருக்கு பாராட்டுகள்.
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
இன்றைய தலைமுறைக்கு ஏற்ற கதை.