நீ ஃபாரெவர் விமர்சனம்

சுதர்சன் கோவிந்த் காதலுக்கென்று ஒரு இணையதளத்தை உருவாக்க வேண்டுமென்ற ஆசையில் சென்னைக்கு வந்து ஒரு தொழில்நுட்ப குழுமத்தில் பணிக்கு சேருகிறார்.இவரது தாத்தா ஒய்.ஜி.மகேந்திரனின் பேரன் சுதர்சன் கோவிந்துக்கு தான் பார்த்துவைக்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ளவேண்டுமென்று பிடிவாதமாக இருக்கிறார்.சுதர்சன்.இந்த நிலையில் சுதர்சன் வேலைக்கு சேரும் அக்குழுமத்தின் நிர்வாகி,அவரின் காதல் அனுபவத்தை கேட்கிறார்.இதற்கு “நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை”என்று சுதர்சன் பதிலளிக்கிறார்.காதல் அனுபவம் இல்லாத நீங்கள் எப்படி காதலுக்கென்று ஒரு இணையதளத்தை உருவாக்க முடியும் முதலில் ஒரு பெண்ணை காதலித்துவிட்டு அந்த அனுபவத்தை சொல்லுங்கள் என்று குழுமத்தின் நிர்வாகி கூறிவிடுகிறார். இப்படி இருக்கும் நிலையில்,ஒரு காதல் திரைப்படத்தை இயக்க வேண்டுமென்று நாயகி அர்ச்சனா தயாரிப்பாளர்களை அணுகுகிறார்.அவர்களும் அர்ச்சனாவிடம் உங்கள் காதல் அனுபவத்தை கேட்க, “இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை” என்று அர்ச்சனா பதிலளிக்க,“நீங்கள் காதலித்துவிட்டு அந்த அனுபவத்தை கதையாக இயக்குங்கள்” என்று ஒரு தயாரிப்பாளர் கூறிவிடுகிறார். இந்தநிலைப்பாட்டோடு சுதர்சனும் அர்ச்சனாவும் ஒரு உணவகத்க்தில் சந்திக்கிறார்கள்.இருவரும் காதலிக்க முடிவு செய்கிறார்கள்.சுதர்சன் உண்மையாகவே அர்ச்சனாவை காதலிக்கிறார்.ஆனால் அர்ச்சனா அனுபவத்துக்கு மட்டுமே காதலிப்பதுபோல் நடிக்கிறார்.இப்படி இருக்க சுதர்சனின் தாத்தா ஒய்.ஜி.மகேந்திரன் காதல் திருமணத்தை வெறுக்க காரணம் என்ன சுதர்சன் அர்ச்சனா காதல் என்ன ஆனது இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.
சுதர்சன் கோவிந்த் தாத்தா ஒய்.ஜி.மகேந்திரனிடம் அவர் பணிந்து செல்லும் காட்சிகளிலும்.அம்மாவிடம் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் அற்புதமாக நடித்துள்ளார்.
கதாநாயகியாக அசர்ச்சனா தனது சிறப்பான நடிப்பினால் ஸ்கோர் செய்துள்ளார்.
மற்றும் பரது,நோபிள் சேம்ஸ்,வித்யா, ஒய்.ஜி.மகேந்திரன்,நிழல்கள் ரவி, எம்.ஜே.ஶ்ரீராம்,ராதிகா ஶ்ரீனிவாஸ் ஆகியோர் அவர்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ளனர்.
ராஜா பட்டாச்சார்ஜியின் ஒளிப்பதிவும்,அஸ்வின் ஹேமந்தின் இசையும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.
ஒரு புதிய கோணத்தில் ஒரு கதையை புதிய சிந்தனையுடன் சிறந்த முறையில் திரைக்கதை அமைத்து படமாக்கியுள்ள இயக்குநர் அசோக்குமார் கலைவாணி அவர்களுக்கு பாராட்டுகள்.
நீ ஃபாரெவர் புதிய சிந்தனை.