ஓ பட்டர்ஃப்ளை விமர்சனம்

அதுல்,நிவேதிதா சதீஷீம் தம்பதியினர் தங்கள் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட மன கசப்புகளை மறந்து ஒரு புதிய தொடக்கத்திற்கு கொடைக்கானலில் உள்ள ஒரு தனிமையான மலை பங்களாவிற்கு செல்கின்றனர்.திருமணமான மறுநாளே வேலை பறிபோனதால்,அதுல் வேலையில்லாத் திண்டாட்டத்தில் இருக்கும் ஒரு கோபக்கார இளைஞனாக இருக்கிறார். நிவேதிதா சதீஷ் தனது கடந்த கால ரகசியம் ஒன்றை தன் கணவனிடம் சொல்லத் துடித்துக் கொண்டு இருக்கிறார்.அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அதுல் தனத பழைய கல்லூரி நண்பரான சிபி சந்திரனை அங்கு சந்திக்கிறார்.அவரை வீட்டிற்கு அழைத்து வருகிறார். வீட்டிற்கு வரும் சிபியை கண்டதும் நிவேதிதா அதிர்ச்சி அடைகிறாள்.ஏன் எனில் நிவேதிதாவுக்கு மட்டும் தான் தெரியும், சிப வெறும் நண்பன் மட்டுமல்ல தனது முன்னாள் காதலன் என்பது. அதுல தனது ஸ்டார்ட்-அப் கம்பெனிக்கு முதலீடு தேடிக்கொண்டிருந்தால்,ஒரு வென்ச்சர் கேபிடலிஸ்ட்டாக இருக்கும் சிபியை தங்கள் வீட்டிலேயே தங்க அழைக்கிறார்.ஒரே வீட்டில் கணவன்,மனைவி மற்றும் மனைவியின் முன்னாள் காதலன் என மூவரும் சிக்கிக் கொள்கின்றனர்.இவர்களுக்கு இடையே நடக்கும் உளவியல் ரீதியான மோதல்கள்,நிவேதிதாவின் குற்ற உணர்வு என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.
நிவேதிதா சதீஷ் கதையின் மையப்புள்ளியாக ஒரு முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ளார்.
அதுல் அனைவருக்கும் எரிச்சலூட்டும் ஒரு கணவராக சிறப்பாக நடித்துள்ளார்.
சிபி சந்திரன்,நாசர்,லட்சுமி பிரியா சந்திரமௌலி,கீதா கைலாசம் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் வைசாக் சோமநாத்தின் இசையும்,ஒளிப்பதிவாளர் வேதராமன் சங்கரனின் ஒளிப்பதிவும் கதைக்கு பலம்.
வண்ணத்துப்பூச்சிகளை மையமாக வைத்து, நம்முடைய ஒரு சிறிய செயல் எப்படி மிகப்பெரிய விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதை கதையாக தேர்ந்தெடுத்துசிறந்த திரைக்கதை அமைத்து இயக்கியுள்ள இயக்குநர் விஜய் ரங்கநாதன் அவர்களுக்கு பாராட்டுகள்.
ஓ பட்டர்பிளை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.