நாயகன் இளம் காவல்துறை அதிகாரியாக ஆதித்ய மாதவன்.காட்டுப்பகுதியில் ஒரு வேன் விபத்துக்குள்ளாகி மூன்று பெண்கள்,ஒரு ஆண் தீயில் கருகி இறந்த வழக்கு ஒன்றை அவர் கையாளுகிறார், அதில் இறந்த பெண்கள் யார் என்று தேடும் முயற்சியில் இறங்குகிறார்,
இந்த நிலையில் அவரது காதலி கௌரி கிஷன் பிரபல மருத்துவமனை ஒன்றில் வேலை பார்க்கிறார்.அங்கே மருத்துவ ரீதியாக ஒரு தவறு நடைபெறுகிறது.அதை கண்டுபிடிக்கும் கௌரி கிஷன் அதை ஆதித்ய மாதவனிடம் சொல்கிறார்.ஆதித்யா துப்பறிந்து கொண்டிருக்கும் வழக்கும் இந்த விஷயமும் ஒரே கோணத்தில் சங்கமிக்கின்றன.
இந்த மூன்று பெண்கள் மரணத்தில் உள்ள மர்மமும்,மருத்துவமனையில் நிகழும் விபரீதம் இரண்டுக்கும் பின்னணியில் இருக்கும் ஒரு முக்கிய நபரை கண்டுபிடிக்கிறார் ஆதித்ய மாதவன். அவரை நெருங்கி செல்லும்போதுதான் அந்த நபரை பற்றிய பல அதிர்ச்சியும் ஆச்சரியமான உண்மையும் விபரீதத்திற்கும் காரணமான வித்தியாசமான பின்னணியும் தெரிய வருகிறது.
அது என்ன யார் அந்த நபர் எதற்காக இதை செய்தார் ஆதித்யாவால் அவரை கண்டுபிடித்து தண்டனை பெற்றுக் கொடுக்க முடிந்ததா என்பதே படத்தின் மீதி கதை.
முதல் படத்திலேயே அறிமுகமாகி முத்திரை பதித்திருக்கிறார் இளம் ஹீரோ ஆதித்ய மாதவன்.
கௌரி கிஷன் இந்த படத்தில் நடிப்பை வெளிப்படுத்துவதற்கு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று வலுவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அஞ்சு குரியன் ஒரு போலீஸ் ஆபீஸராக கம்பீரமான உடல் மொழியுடன் படம் முழுவதும் அவர் வரும் காட்சிகள் நமக்கு எனர்ஜி ஏற்றுகின்றன.
மற்றும் முனிஷ்காந்த்,முண்டாசுபட்டி ராமதாஸ்,ஆர் சுந்தர்ராஜன்,மாலா பார்வதி ஆகியோர் அவர்களது பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.
ஜிப்ரான் அவர்களின் இசையும்,அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம்.
அபின் ஹரிஹரன் முதல் பட இயக்குநராக இருந்தாலும் ஆரம்பம் முதல் இறுதி காட்சி வரை விறுவிறுப்பு குறையாமல் கொண்டு சென்று இருக்கிறார் அவருக்கு பாராட்டுகள்.
அதர்ஸ் இன்வெஸ்டிகேஷன் ஆக்சன் திரில்லர் நிறைந்த அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
