மதுரை அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யும் காதல் சுகுமாரை காவல்த்திறையினர் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து அடித்து தாக்குகிறார்கள்.இதனால் பலத்த உள்காயம் நிறைந்த சுகுமார் இறந்து விடுகிறார். அதன் பிறகுதான் இறந்து போனது அரசியல் பின்பலமிக்க ரவுடி சரவணனின் மகன் என்று காவல்த்துரையினருக்கு தெரியவருகிறது.இதனால் பயந்துபோன காவலர்கள் பிணத்தை யாருக்கும் தெரியாமல் சாலையோரத்தில் கிடத்தி வைத்துவிட்டு வந்து விடுகிறார்கள்.தன் மக்னைக்கொன்ற அந்த காவலர்களை பழிவாங்க ரவுடி சரவணன் முடிவெடுக்கிறார்.முடிவெடுத்தபடி ரவுடி சரவணன் காவலர்களை தண்டித்தாரா இல்லையா.அவரிடமிருந்து காவலர்கள் தப்பித்தாரார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
இது வரைகுணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்த சரவணன் இந்தப் படத்தில் சிறந்த வில்லனாக தன்னை சித்தரித்துள்ளார்.
காதல் சுகுமார் இப்படத்தில் நகைச்சுவைக்கு இடமளிக்காமல் வேறொரு கோணத்தில் தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.
மற்றும் ராஜா மலைச்சாமி,நிஷா துபே, சுரேகா ஆர்,ரோஜன் லியோன்,ரத்னம், தாஸ் சாந்தகுமார்,எம்.எஸ்.செல்வா உள்ளிட்ட அத்தனை நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஜெயகுமார் தங்கவேலின் ஒளிப்பதிவும், ஜெயா கே.தாசின் இசையும் படத்திற்கு பலம்.
விசாரணைக் கைதிகள் காவல் நிலையத்தில் மரணமடைவதிப்பற்றிய கதையை கையில் எடுத்து சிறந்த முறையில் திரைக்கதை அமைத்து தெளிவான முறையில் இயக்கி இருக்கும் இயக்குநர் எம்.பாலு அவர்களுக்கு பாராட்டுகள்.
“போலீஸ் பேமிலி”காவல் துறையினரின் அராஜகம்.
