பூசாண்டி வரான் திரை விமர்சனம்


பூசாண்டி வரான்: திரை விமர்சனம்
தொல் பொருட்களை வாங்கி விற்கும் நபர், அவருக்கு உதவியாக இருவர். இவர்கள் பெரிய பங்களாவில் தங்கி இருக்கின்றனர்.
இவர்களிடம், ஒருவர் பழங்கால நாணயத்தை விற்கிறார்.
அது வந்தபிறகு, அந்த வீட்டில் அமானுஷ்யமான சம்பவங்கள் நடக்கின்றன. மூவரில் ஒருவர் கொல்லப்படுகிறார்.
இதையடுத்து மீதமுள்ள இருவரும், பேய்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும் ஒருவரும் சேர்ந்து நாணயத்தில் நதி மூலம், ரிசிமூலம் தேடிப் புறப்படுகிறார்கள்.
தொடர்ந்து பல திகில் சம்பவங்களை சந்திக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கான விடையை தேடிக் கண்டடைந்தார்களா இல்லையா என்பதுதான் கதை. திகில் கதையை, சிறப்பான திரைக்கதை மூலம், வரலாற்று காலத்தை இணைத்திருக்கிறார் இயக்குநர் ஜே.கே.விக்கி.
மன்னர் காலத்தில் சைவ வைணவ போட்டிகள் ஏராளம். அந்த சூழலில் ஆட்சிக்கு வந்த வைணவ மன்னன், சைவர்கள் மீது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கிறான். முக்கியமாக,  சிவனடியார்கள் நெற்றியில் திருநீறு அணியக்கூடாது என்று கட்டளை இட்டுகிறான்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சிவனடியார்கள் நெற்றியை விட்டுவிட்டு உடல்முழுதும் திருநீறு பூசிக்கொள்கிறார்கள்.

அப்படிப் பூசிக்கொண்ட ஆண்டிகள்தாம் மக்களால் பூச்சாண்டிகள் என்றழைக்கப்பட்டனர்.
அரசனும் அவனது ஆட்சியும்,  அவர்களைக் குற்றவாளிகள் போல் நடத்தியிருக்கிறது.
இதன் மூலம், சைவம், வைணவம் இரண்டும் வேறு வேறு மதங்கள் என்கிற வரலாற்றையும் சொல்லி இருக்கிறார் இயக்குநர்.
தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன்நாதன், கணேசன் மனோகரன் உள்ளிட்ட அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
தொல்பொருள் ஆராய்ச்சி மாணவியாக முக்கிய வேடமேற்றிருக்கு ஹம்சினி படத்துக்குத் திருப்புமுனையாக இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் முகமதுஅலி இதுவரை பார்த்திராத மலேசியப்பகுதிகளை  கண்முன் நிறுத்துகிறார்.
ஷாவின் இசையும் ஜேசனின் ஒலிவடிவமைப்பும் திகிலை மேலும் கூட்டுகின்றன.
ஆவிகள் பற்றி எழுதும் பத்திரிகையாளராக நடித்திருக்கும் மிர்ச்சி ரமணாவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சிறு காட்சியாக வந்தாலும், மலேசியாவுக்கும், தமிழ்நாட்டுக்குமான தொடர்பை சிறப்பாக வெளிப்படுத்தி  இருக்கிறார்கள். அத்தனை சிறப்பான திரைக்கதை. படக்குழுவினர் அனைவரும் மலேசியாவைச் சேர்ந்தவர்கள்.
தமிழ்நாட்டு படத்துக்கு இணையாக, சுவாரஸ்யமாக எடுத்திருக்கிறார்கள்.

அனைவரும் பார்தது ரசிக்கும் படியான ஒரு படம்.