நாயகன் ரியோ தொடர் காதல் தோல்விகளால் வாழ்க்கையில் கடும் மனச்சோர்வடையும் இவர் ஒரு ரயில் பயணத்தின் போது எதிர்பாராதவிதமாக வர்த்திகாவைச் சந்திக்கிறான்.முதல் பார்வையிலேயே இருவருக்கும் இடையே ஏற்படும் ஈர்ப்பு மெல்ல மலரும் காதலாக உருவெடுத்து அவர்களின் வாழ்க்கையை மிக வண்ணமயமாக மாற்றுகிறது.காதல் தீவிரமடையும் வேளையில் வர்த்திகா ஒரு வித்தியாசமான நிபந்தனையை விதிக்கிறாள் மாலை 6 மணிக்கு மேல் தன்னை எக்காரணம் கொண்டும் சந்திக்கக் கூடாது என்பதே அது இந்த விசித்திரமான விதிக்கு பின்னால் இருக்கும் மர்ம முடிச்சுகள் என்ன வர்த்திகாவின் கடந்த கால பின்னணி என்ன, மற்றும் ரியோ இந்த சஸ்பென்ஸை இறுதிவரை உடைக்காமல் அந்த மர்மத்தை அவிழ்த்து காதலில் வென்றானா என்பதே மீதிக்கதை.
ரியோ தனது அப்பாவியான முகபாவனைகள் மூலமும் இயல்பான டைமிங் நகைச்சுவையிலும் கதாபாத்திரத்திற்கு முழுமையாக உயிர் கொடுத்து சிறப்பாக நடித்துள்ளார்.
வர்த்திகா கனமான முதன்மையான கதாபாத்திரத்தை ஏற்று தனது முழு ஈடுபாட்டை வழங்கியுள்ளார்.
மற்றும் சேத்தன்,மாளவிகா அவினாஷ்,தீபா வெங்கட் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர் மல்லிகார்ஜுன் அவர்களின் ஒளிப்பதிவும்,இசையமைப்பாளர் அங்கித் மேனனின் இசையும் கதைக்கு கூடுதல் பலம்.
காதல்,கிரைம் மற்றும் சைக்காலஜிக்கல் த்ரில்லர் என அனைத்தையும் கையில் எடுத்து அனைத்து கூறுகளைக் கலந்த ஒன்றாக இணைத்து சிறந்த திரைக்கதையாக உருவாக்கி இயக்கி இருக்கும் இயக்குனர் ராமச்சந்திரன் கண்ணன் அவர்களுக்கு பாராட்டுகள்.
ராம் அண்ட் லீலா குடும்பத்துடன் காணவேண்டிய ரொமான்ஸ்,காமெடி, த்ரில்லிங் நிறைந்த பொழுதுபோக்கு.
