31 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் மீதான தடை நீக்கப்பட்டு தற்போது மீண்டும்
திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
இந்த மறுவடிவமைக்கப்பட்ட பதிப்பில் 4கே காட்சிகள், மேம்படுத்தப்பட்ட ஆடியோ மற்றும் அசல் ஆங்கிலப் பதிப்போடு புதிய இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் டப்பிங்கில் வெளிவந்துள்ளது.யுகோ சகோவால் உருவாக்கப்பட்டு கொய்ச்சி சசாகி மற்றும் ராம் மோகன் இயக்கிய இந்தத் திரைப்படம், கிட்டத்தட்ட 100,000 கையால் வரையப்பட்ட செல்களைப் பயன்படுத்தி 450 கலைஞர்களை உள்ளடக்கிய ஒரு அரிய இந்தோ-ஜப்பானிய கூட்டுப்பணியாகும்.
வால்மீகியின் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட காட்சிகள், காவிய போர், இளவரசர் ராமரின் பிறந்த இடமான அயோத்தி, மிதிலாவில் சீதாவை மணப்பது, இளவரசர் ராமர் சீதை மற்றும் லக்ஷ்மணருடன் வனவாசம் கழித்த பஞ்சவடி காடு, சீதையை ராவணன் கடத்திச் செல்லும் போது அவரை காப்பாற்ற முயற்சிக்கும் ஜடாயு பறவை, அனுமான் சீதையை கண்டுபிடிப்பது பின்னர் இலங்கையை தீயால் துவம்சம் செய்து விட்டு வருவது, ராமர் அனுமனிடமிருந்து சீதையைப்பற்றி அறிந்து கொள்வது, ராமர் சேது பாலத்தின் உருவாக்கத்தையும், அனைத்து வனவிலங்குகளும் உதவி செய்வது, ராமர் மற்றும் ராவணன் இடையே நடந்த புகழ்பெற்ற மோதலின் போர்க்களம், ராவணனின் தம்பி கும்பகர்ணனின் பிரமாண்ட உருவம், வானரப்படை மற்றும் லட்சுமணனின் காயங்களை குணப்படுத்த சஞ்சீவனி மூலிகையை இமயமலையிலிருந்து கொண்டு வரும் ஹனுமானின் சாகச பயணம் என்று அனைத்தும் ஜப்பானிய அனிமேஷன் பாணியில் அழகாக வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.
ராமர் குரல் செந்தில்குமார், சீதையாக குரல் டி. மகேஸ்வரி, ராவணனாக குரல் பிரவீன் குமார்,லட்சுமணன் குரல் தியாகராஜன், ஹனுமான் குரல் லோகேஷ் மற்றும் ஆரம்பம் முதல் இறுதிய வரை இடையிடையே கதையின் சம்பவங்களை அழகாக விவரித்துள்ளார் நரேட்டர் ரவூரி ஹரிதா இவர்களது பணி மிக சிறப்பாக அமைந்துள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும்படி எளிதாக புரிந்துகொள்ளக்கூடியதாகவும் அமைந்துள்ளது.
ராமாயணா: தி லெஜன்ட் ஆஃப் பிரின்ஸ் நடைமுறைக்கு ஏற்ற அற்புத படைப்பு.
