ரத்தம் விமர்சனம்

ஒரு ஊடக நிறுவனத்தின் ஆசிரியர் செழியனின் கொலையுடன் தொடங்குகிறது. கொலையாளி ஒரு கட்சித் தலைவனின் ரசிகராவார், அவர் தனது தலைவர் மீது வெளியிடப்பட்ட முரண்பாடான கதையால் கோபமடைந்து இந்த கொலையை செய்கிறார். இது ஒரு புரம் இருக்க இங்கிர
கொல்கொத்தாவில் முன்னாள் புலனாய்வு பத்திரிகையாளர் விஜய் ஆண்டனி தனது மனைவியின் மரணத்திற்கு பிறகு வேலையை விட்டு விலகி, தனது இளம் மகள் அரும்பாவுடன் கொல்கத்தாவில் வசிக்கிறார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு சோகம் காரணமாக அவர் கடந்த கால தொடர்புகளிலிருந்து முற்றிலும் விலகி இருக்கிறார். அவர் வாழ்க்கைக்காக குதிரைகளை பராமரிக்கும் வேலையை செய்து வருகிறார். விஜய் ஆண்டனி அந்த சோகத்திலிருந்து வெளிவர முடியாமல் சதா குடித்துக் கொண்டே இருக்கிறார். சென்னையில் மர்ம நபரால் பத்திரிகை அலுவலகத்தில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட செழியனின்  தந்தையும் விஜய் ஆண்டனி யின் வளர்ப்புத் தந்தையும் அந்த பத்திரிகை நிறுவன முதலாளியான நிழல்கள் ரவி கொல்கத்தாவில் விஜய் ஆண்டனி யை சந்தித்து சென்னைக்கு வரும்படி வேண்டுகோள் வைக்கிறார். அந்த வேண்டுகோளை அவர் மறுக்கிறார். ஒரு கட்டத்தில் விஜய் ஆண்டனி மீண்டும் சென்னைக்கு வருகிறார், வளர்ப்புத் தந்தை நிழல்கள் ரவி மற்றும் குற்றவியல் தலைமை நிருபர் நந்திதா ஸ்வேதாஆகியோருடன் இணைந்து. தனது நண்பன் செழியனின் கொலைக்கான பின்னணியை ஆராய தொடங்கும்போது, ஒரு மாவட்ட ஆட்சியரும் கொல்லப்படுகிறார்.இந்தக் கொலைகளுக்கு பின்னால் ஒரு பெரிய நெட்வொர்க் உள்ளது என்பதை உணர்ந்து கொலையை விசாரிக்கிறார். அந்த கும்பல் யார், அந்த சூத்திரதாரியின் நோக்கம் என்ன என்பதை கண்டறிந்து அதை முறியடித்தாரா விஜய் ஆண்டனி என்பதே படத்தின் மீதிக்கதை.
விஜய் ஆண்டனி இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்ட் பாத்திரத்தில் இன்னும் அதிக ஈடுபாடு காட்டி இருக்க வேண்டும் ஏனோத தவறி விட்டார்.
குற்றவியல் தலைமை நிருபர் மதுமிதாவாக நந்திதா ஸ்வேதா தன்னுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
மஹிமா நம்பியார், ரம்யா நம்பீசன், இருவருடைய கதாபாத்திரம் அழுத்தம் இல்லாமல் இருக்கிறது.
இசையமைப்பாளர் கண்ணனின் இசையும், ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத் ஒளிப்பதிவும் திரைக்கதைக்கு உயிர் கொடுத்துள்ளார்.
டி.எஸ்.சுரேஷ் எடிட்டிங் விறுவிறுப்பாக அமைய வில்லை.
இயக்குனர் சி.எஸ்.அமுதன் இன்னும் கொஞ்சம் வேறுவிதமாக கதையை கொன்டு சென்றிருக்கலாம் ஏன் இந்த தடுமாற்றம் என்று புரியவில்லை.
ரத்தம் ரணகளம்.