ரோமியோ விமர்சனம்

திருமண வயது தாண்டியும் வெளிநாட்டில் வேலை செய்து நன்றாக சம்பாதித்து சொந்த ஊருக்கு திரும்புகிறார் நாயகன் விஜய் ஆண்டனி இவரின் பெற்றோர்களான இளவரசுவும் சுதாவும் அவரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார்கள். காதலித்து தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதமாக இருக்கிறார் விஜய் ஆண்டனி.கதையின் நாயகி மிருணாளினி ரவி சென்னையில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்வதாக பொய் சொல்லிவிட்டு சினிமாவில் நாயகியாக நடிக்க சான்ஸ் தேடிக் கொண்டிருக்கிறார். தாத்தாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள ஊருக்கு வரும் மிருணாளினி ரவியை பார்க்கிறார் விஜய் ஆண்டனி. பார்த்தவுடன் அவர் மேல் காதல் வயப்படுகிறார். மிருணாளினி ரவியின் தந்தையான தலைவாசல் விஜய்க்கு பண நெருக்கடி ஏற்பட அவருக்கு உதவி செய்கிறார் விஜய் ஆண்டனி.அதன்பின்
மிருணாளினி ரவியின் பெற்றோர் சம்மதத்துடன் பத்து வயது வித்தியாசம் உள்ள அவரை திருமணம் செய்து கொள்கிறார். திருமணம் முடிந்தவுடன் தான்
மிருணாளினிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதும், ஹீரோயினாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார் என்பதை
விஜய் ஆண்டனி அறிந்து கொள்கிறார்.சென்னையில் புதுமண தம்பதிகள் குடியேறுகின்றனர்.மனைவி தன் சினிமா நண்பர்களுடன் சேர்ந்து கும்மாளம் போட்டு இவரை விவாகரத்து செய்ய வைக்க முயற்சிக்கிறார்.ஆனால் தனது மனைவியை ஒரு தலையாக காதலிப்பதால் அதையெல்லாம் பொறுத்துக் கொள்கிறார்.
மிருணாளினி ரவியின் ரசிகன் விக்ரம் என்று பெயரை மாற்றிக்கொண்டு அவரை மொபைல் மூலம் தொடர்பு கொண்டு அவரை ஊக்கப்படுத்தி அவரின் லட்சியத்தை அடைய உதவி செய்கிறார். பின்னர் மனைவியை கதாநாயகியாக வைத்து அவரின் சினிமா நண்பர்கள் உதவியுடன் ரோமியோ என்ற பெயரில் படம் தயாரித்து நடிக்க முடிவு செய்கிறார். இறுதியில் விஜய் ஆண்டனி மனைவியின் கனவை நிறைவேற்றினாரா அவரது மனைவி அவரின் உண்மையான காதலை உணர்ந்து கொண்டாரா அவரை ஏற்றுக் கொண்டாரா என்பதே படத்தின் மீதிக்கதை.
இதுவரை அடிதடி சண்டை என நடித்து வந்த விஜய் ஆண்டனி தனக்கும் ரொமான்ஸ் காமெடி வரும் என்பதை இப் படத்தின் மூலம் தனது திறமையை நிரூபித்துள்ளார் அவருக்கு பாராட்டுகள்.
மிருணாளினி ரவி தனது முக்கியத்வமான பாத்திரத்தை உணர்ந்து திறமையாக நடித்துள்ளார்.
படத்தின் மற்ற கலைஞர்களான யோகி பாபு,விடிவி கணேஷ்,தலைவாசல் விஜய், இளவரசு,சுதா,ஸ்ரீஜா ரவி,ஷாரா,ரோஜு, ஷாலினி விஜயகுமார்,அத்வைத்,ஜெய சம்ருதா,முரளி ஆகியோர் படத்தில் சிறப்பான முறையில் நடித்துள்ளனர்.
ஃபரூக்.ஜே பாஷாவின் ஒளிப்பதிவும்,பரத் தனசேகர் அவர்களது இசையும் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.
இயக்குனர் விநாயக்வைத்தியநாதன் புதிய கோணத்தில் நகைச்சுவை அம்சங்களுடன் குடும்பத்துடன் அனைவரும் ரசிக்கும் வண்ணம் கொடுத்துள்ளார் அவருக்கு பாராட்டுகள்.
ரோமியோ அனைவரும் குடும்பத்துடன் ரசிக்கும் படியான கணவன் மனைவியின் அன்பின் வெளிப்பாடு.