பிரஜின் தன் மனைவி நியா வர்கீஸ் மற்றும் இரண்டு தங்கைகளுடன் ஒரு பெரிய தனிமையான பங்களாவில் வசித்து வருகிறார்.இவரது தாய்மாமன் மகனான கணேஷ் சாவரட்டில் குடிப்பழக்கம், ரவுடித்தனம்,மற்றும் பாலியல் வன்கொடுமை எனப் பல கொடூரக் குற்றங்களுக்காகச் சிறைக்குச் சென்று திரும்பிய ஒரு கொடூரமான சைக்கோ வில்லன்.குடும்ப வழக்கப்படி,பிரஜின் தனது மூத்த தங்கையைக் கணேஷ் சாவரட்டிலுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்புகிறார். ஆனால்,கணேஷின் மிருகத்தனமான குணத்தை அறிந்த மூத்த தங்கை இந்தத் திருமணத்தை மறுப்பதோடு,தான் ஏற்கனவே வேறு ஒருவரை காதலிப்பதாகவும் கூறுகிறார்.இதனிடையில் அந்த மூத்த தங்கை மர்மமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஒரு அடர்ந்த புதர் பகுதியில் இறந்து கிடக்கிறார்.மூத்த தங்கையின் மரணம் கொலையா என்ற சந்தேகம் இன்னும் விலகாத நிலையிலும், குடும்பச் சூழல் காரணமாக பிரஜின் தனது இரண்டாவது தங்கையான ஷர்மிஷாவை அதே கணேஷ் சாவரட்டிலுக்குத் திருமணம் செய்து வைக்கத் துணிகிறார்.ஆனால், அக்காவைப் போலவே ஷர்மிஷாவும் வேறொரு இளைஞரைக் காதலித்து வருகிறார்.ஷர்மிஷா இதனை எதிர்க்க,ஒரு அறையில் தன் அண்ணன் பிரஜினால் வீட்டு காவலில் அடைக்கப்படுகிறார்.இதனால் மனஉளைச்சலடையும் ஷர்மிஷா தன் காதலனை வீட்டிற்கு மாடி வழியே வரவழைத்து தன்னுடைய அறையில் தங்க வைக்கிறார்.இதற்கிடையே பிரஜினின் வக்கீல் நண்பர் ஒருவர் தன் தந்தை மற்றும் மகளை அந்த வீட்டில் ஒரு இரவு தங்க வைத்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ள, பிரஜினும் இதற்கு சம்மதிக்க, இருவரும் வந்து அந்த வீட்டில் தங்குகிறார்கள். சிறையிலிருந்து விடுதலையாகி பிரஜினின் வீட்டிற்கு வரும் கணேஷ் சாவரட்டிலிக்கு தங்கையை மணமுடிக்க ஏற்பாடு செய்கிறார் பிரஜின்.கணேஷ் சாவரட்டிலின் சதிவலைகளால் அந்தப் பங்களாவிற்குள் இருப்பவர்களுக்கு அடுத்தடுத்து பேராபத்துகள் தொடர்ந்து நடக்கின்றன. சட்டம் மற்றும் குடும்பக் கட்டுப்பாடுகளால் எதையும் செய்ய முடியாத சூழலில் தவிக்கின்றார் பிரஜின் இந்நிலையில் ஒரு முகமூடி மனிதன் அந்தப் பங்களாவிற்குள் நுழைகிறான்.கணேஷ் சாவரட்டில் அந்த முகமூடி மனிதன் எப்படித் தேடித் பிடித்து‘சம்ஹாரம்’ செய்கிறான் அந்த முகமூடிக்கு பின்னால் இருக்கும் அந்த நபர் யார் என்பதே படத்தின் மீதிக்கதை.
பிரஜின் ஒரு பாசமுள்ள அண்ணனாக சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளார்.
ஷருமிஷா,நியா வர்கீஸ்,கணேஷ் சாவரட்டில்,ராஜ்குமார்,தென்றல் ராஜா,ராம் பிரபா ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
வி ஜி ஹரி கிருஷ்ணன் இசையும், சுரேஷ்குமார் சுந்தரம் ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலம்.
ஒரே இரவில் ஒரே பங்களாவிற்குள் நடக்கும் கதையை கையில் எடுத்து சிறந்த த்ரில்லரான திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் இயக்குனர் ராம் பிரபா அவர்களுக்கு பாராட்டுகள்.
சம்ஹாரம் விறுவிறுப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர்.
