சட்டமும் நீதியும் விமர்சனம்

கோர்ட் வளாகத்திற்கு வெளியே புகார்களை ​டைப்அடித்துக் கொடுக்கும் ஒரு சாதாரண நோட்டரி பப்ளிக்காக வாழ்க்கையை ஓட்டும் வழக்கறிஞர் சரவணன் உண்மையில் அனைத்து சட்ட நுணுக்கங்கள் அறிந்த ஒரு திறமையான வக்கீல் ஏனோ அவர் நீதிமன்றத்தில் வாதாடி புகழ் பெறவில்லை.​ சட்டப்படிப்பு படித்து விட்டுத்​ பிரபல வழக்கறிஞர்களிடம் ஜீனியராக சேர முயற்சிக்கும் நம்ரிதா எம்.விக்கு வழக்கறிஞர் சரவணன் சிபாரிசு கடிதம் கொடுக்கிறார். ஆனால் அவருடைய சிபாரிசு நிராகரிக்கப்பட்டு நம்ரிதாவுக்கு ஜீனியராகும் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதனால் அவர் அனைத்து சட்ட நுணுக்கங்கள் அறிந்த வழக்கறிஞர் சரவணனிடமே ஜீனியராக சேர விரும்புகிறார். சரவணனோ எனக்கே எந்த கேசும் இல்லை நீ ஏன் என்னுடன் ஜீனியராக சேர்வது சரியில்லை என்று அனுப்பி விடுகிறார். வீட்டில் தன் குடும்பத்தினர் மற்றும் கோர்ட்டில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களும் அவர் ஒரு தோல்வி அடைந்த வக்கீல் என பேசி அவமானப்படுத்தி வருகின்றனர். ஒரு கட்டத்தில் தன்னுடைய மகன் அவரை பார்த்து நீங்கள் தோல்வி அடைந்த வக்கீல் என்று கூறி அவரை மிகவும் அவமானம் படுத்திவிடுகிறார்.
எப்படியாவது ஒரு வழக்கறிஞராக ஒரு கேஸை எடுத்து வாதாடி அதில் ஜெயிக்க வேண்டும் என்று சரவணன் முடிவு செய்கிறார்.

கோர்ட் வளாகத்தில் தீ வைத்து கொளுத்தி கொண்டு இறந்த பெரியவர் சண்முகத்தின் கேஸை பொதுநல வழக்காக கையில் எடுக்கிறார் சரவணன். அவருக்கு உதவியாளராக நம்ரிதா சேருகிறார். இந்த பொது நல வழக்கிற்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்று போராடும் தருவாயில் எல்லாம் ஒவ்வொரு முறையும் அவருக்கு தோல்வியே கிடைக்கின்றன. இருந்தாலும் அவர் விடாமுயற்சியுடன் தொடர்ந்து போராடுகிறார். அவர் இந்த வழக்கிற்கான ஆதாரத்தை மேற்கொள்ளும் போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. அதாவது வெண்ணிலா என்ற தனது மகளை காணவில்லை என்று போலீசாரிடம் வழக்கு கொடுக்கும் சண்முகத்தை போலீஸார் எதுவும் விசாரிக்காமல் அவரை துரத்தி அடிக்கின்றனர். மனவேதனை அடையும் அவர் கோர்ட் வளாகத்தில் தீ குளித்ததும், அந்த முதியவர் 20 வருடங்களுக்கு முன் மூன்று வயதுடைய மகள் வெண்ணிலா காணாமல் போனதால் 20 வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதும், மூன்று வயதில் காணாமல் போன மகள் வெண்ணிலா எட்டு வயதில் கிடைக்கப் பெற்று தாயிடம் ஒப்படைக்கப்பட்ட தகவல் கிடைக்கிறது. மேலும் தொடர்ந்து அந்த கேஸ் சம்பந்தப்பட்ட ஆதாரத்தை சேகரிக்கும் போது குப்புசாமியின் மனைவி வேறு ஒருவரை மறுமணம் செய்து கொள்வதும், தாயிடம் மகள் வெண்ணிலா இல்லாததும் தெரியவருகிறது இந்த சாதாரண வழக்கில் செல்வாக்கு மிக்க பிரபல வழக்கறிஞர் ஆரோல் டி சங்கர் ஆஜர் ஆவதும், காணாமல் போன வெண்ணிலா பற்றி அதிர்ச்சி தரும் ஒரு சிக்கலான மர்மங்கள் அடுத்தடுத்து வரும் எபிசோடுகளில் வெளியாகிறது. இறுதியில் வழக்கறிஞராக சரவணன் ஜெயித்தாரா சண்முகத்தின் மகள் வெண்ணிலா கிடைத்தாரா இறந்து குப்புசாமியின் தியாகத்திற்கு நீதி கிடைத்ததா என்பதுதான் மீதிக்கதை.
வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி கதாபாத்திரத்தில் சரவணன் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது மனதில் இடம்பிடித்துள்ளார்.
சரவணனின் உதவியாளராக அருணா கதாபாத்திரத்தில் நம்ரிதா துணிச்சல் மிக்க பெண்ணாக நேர்த்தியான நடிப்பை தந்துள்ளார். மற்றும் சண்முகம்,ஆரோல் டி.சங்கர், திருச்செல்வம்,விஜய்ஸ்ரீ, இனியா ராம் என அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பு தந்துள்ளனர்.ஒளிப்பதிவாளர் எஸ். கோகுல்கிருஷ்ணன் ஒளிப்பதிவும்,இசையமைப்பாளர் விபின் பாஸ்கர் இசையும் கதைக்கு மேலும் வலுவாக அமைந்துள்ளது.இப்படி ஒரு உணர்வுப்பூர்வமான கதையை  சமூக அக்கறை மிக்க படைப்பாக திரைக்கதை அமைத்து பல திருப்பங்களுடன் 7 எப்பிசோட் களையும் பரபரப்பான காட்சிகளுடன் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் நகரும் படி காட்சிப்படுத்திய அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் அவர்களுக்கு பாராட்டுகள்.
சட்டமும் நீதியும் எல்லா தரப்பு மக்களுக்கும் சமம் என்பதை தெளிவாக விளக்கியுள்ளது.