கதாநாயகன் சாய் ராகுல் மட்டுமே
நடித்துள்ள
” சீ ற் ற ம் ”
இசையமைப்பாளர்
இயக்குனரான படம் |
பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்தவர் ராஜ் பாஸ்கர். இவர் கதை திரைக்கதை , வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகும் படம் தான் “சீற்றம்”.
இந்தப் படத்தின் கதையை பற்றி இயக்குனர் ராஜ் பாஸ்கர் கூறியதாவது, ”
“மன நல காப்பகத்தில் இருந்து ஒருவன் தப்பிக்கிறான். ஒரு லாரி அவனை இடித்து தள்ளுகிறது. இது ஆக்சிடெண்ட் இன்னொருத்தனின் கனவில் வருகிறது. அவன் பதட்டமா எழுந்திருக்கிறான். யோசனை பண்றான் லாரியில் அடிபட்டவன் என்னை மாதிரியே இருக்கான். யார் அவன் அப்படின்னு குழப்பத்துல இருக்கான் இங்க தான் கதை ஸ்டார்ட் ஆகுதுன்னு நாயகன் தயாரிப்பாளரிடம் இப்படிப்பட்ட கதையை கூறி இயக்குனர் ஆவதற்கு வாய்ப்பு கேட்கிறான். அந்த கதையை கேட்டு ரொம்ப நல்லா இருக்கு second half சொல்லுங்கன்னு தயாரிப்பாளர் கேட்கிறார். இனிமேல் தான் ரெடி பண்ணனும்னு சொல்றான் . அப்படின்னா ஒரு வேலை பண்ணுங்க என்னோட கெஸ்ட் ஹவுஸில் போய் ரெடி பண்ணுங்க அனைத்து வசதியும் நான் செஞ்சு தரேன்னு சொல்றார் . கெஸ்ட் ஹவுஸ் போன நாயகன் முன்பு லாரியில் அடிபட்டு இறந்தவன் நிற்கிறான் அதன் பிறகு நடப்பவைகளை மிக விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லி இருக்கிறேன். தமிழ் சினிமா வரலாற்றில் புது முயற்சியாக நாயகன் மட்டுமே நடிக்கும் கதையாக சொல்லி இருக்கிறேன். இதில்அம்மா பாட்டு உண்டு ஆனால் அம்மா இருக்க மாட்டாங்க. காதல் பாட்டு உண்டு ஆனால் காதலி இருக்க மாட்டா, வில்லனின் டார்ச்சர் இருக்கும். ஆனால் வில்லன் இருக்க மாட்டான். இப்படி பல புதுமைகளை திரைக்கதையில் கையாண்டிருக்கிறேன். படம் முழுக்க
ஹீரோ கேரக்டர் மட்டும்தான் மூவ் ஆகும் இந்த படத்தை மலேசியா , இலங்கை, திபெத், மைசூர் கூர்க், மடிக்கேரி, மற்றும் சென்னையில் பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தி உள்ளோம். இந்த படம் பார்ப்பவர்கள் “புது புதுவித அனுபவமா இருக்கும்” என்று நிச்சயம் கூறுவார்கள் ” என்று கூறி முடித்தார்.
சாய் ராகுல் கதையின் நாயகனாக தனித்து படம் முழுக்க நடித்து அறிமுகமாகிறார். ஜெயராம் சக்ரவர்த்தி இசையமைக்க , சொற்கோ கருணாநிதி, மாணிக்கவாசகம் இருவரும் பாடல்களை எழுதி உள்ளனர். செந்தில்ராஜா. – சஞ்சய் சூர்யா இருவரும் ஒளிப்பதிவு செய்ய, சஞ்சீவ் ரெட்டி படத்தொகுப்பையும், சசி அன்ட் சசி டிசைனையும், விஜயமுரளி மக்கள் தொடர்பையும் கவனிக்கின்றனர்.
நந்தினி ஆர்ட் கிரியேஷன்ஸ் சார்பில் சிங்கப்பூர் சிவகுமார் புது முயற்சியில் உருவாகி உள்ள இந்த வித்தியாசமான படத்தை தயாரித்துள்ளார்.
விஜயமுரளி
PRO