நிஷாந்த் ரூஷோ இளம் வயதில் தலையில் சொட்டை விழுந்ததால் தனது வழுக்கைத் தலையை பற்றி கவலைப்படுகிறார்.அவர் வீட்டில் திருமணம் செய்யத் திட்டமிட்டு கல்யாணத்துக்குப் பெண் தேடித் அலைந்து பெண் கிடைக்காமல் வேதனைப்படுகிறார். இதற்கிடையே நிஷாந்த் ரூஷோவின் எதிர் வீட்டுப் பெண் ஷாலினி நிஷாந்த் ரூஷோவின் அன்பான மனதை புரிந்து கொண்டு திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார்.கல்யாண ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு நிஷாந்த் ரூஷோவின் திருமணத்திற்கு பின் சந்தோஷம் அனுபவிக்க தனது நண்பர் அனுப்பிய வீடியோ ஒன்றை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.பிறகு ஷாலினியை வெறுத்து திட்டித் திருமணத்தை நிறுத்தி விடுகிறார். ஷாலினி தனது பக்க நியாயத்தை சொல்ல கூட அவர் இடம் தரவில்லை. அதன் பின் நிஷாந்த் ரூஷோ சென்னைக்கு சென்று தலைமுடிக்கு சிகிச்சை பெற்று முடியுடன் மீண்டும் தோன்றுகிறார். சமூக ஊடகங்களில் ரீல்ஸ் போட்டு வாழும் இன்ஸ்டா பிரபலம் வர்ஷினி வெங்கட் என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள தயார் ஆகிறார். இந்நிலையில் ஷாலினி நிஷாந்த் ரூஷோவின் நண்பனிடம் ஒரு வீடியோவை மட்டுமே பார்த்து ஒரு தவறான முடிவுக்கு வருவது எந்த விதத்தில் நியாயம் என்று அந்த வீடியோ பற்றிய உண்மையை தெளிவாக சொன்ன பின் ஷாலினியின் நிலையை புரிந்து கொண்ட நிஷாந்த் ரூஷோவின் நண்பர்கள் திருமணத்தை நிறுத்த போராடுகிறார்கள். இதைத்தொடர்ந்து நடக்கும் கலகலப்பான சம்பவங்கள்,அதிரடி திருப்பங்கள் தான் படத்தின் மீதிக்கதை.
நிஷாந்த் ருஸ்ஸோ இளம் வயதிலேயே வழுக்கை விழுபவர்களின் மன வலியை கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார்.
மற்ற கதாபாத்திரங்களான வர்ஷிணி வெங்கட்,ஷாலினி,ஆனந்த் பாண்டி,ரியா, பிரியங்கா,ரோபோ சங்கர் மற்றும் அனைத்து நடிகர்களும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
கேமராமேன் ரயீஷ் அவர்களின் ஒளிப்பதிவும்,இசையமைப்பாளர் ரெஞ்சித் உன்னியின் இசையும் படத்திற்கு பலம்.
முடி உதிர்தல் மனித வாழ்க்கையின் இயல்பான ஒரு பகுதி,அது அவர்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை நகைச்சுவையுடன் சித்தரிக்கும் வகையில் உருவாக்கியுள்ள அறிமுக இயக்குனர் நவீத் எஸ்.ஃபரித் அவர்களுக்கு பாராட்டுகள்.
சொட்ட சொட்ட நனையுது சொட்டை இல்லாமல் நகர்கிறது.
