‘ஸ்டிரைக்கர்’ திரைவிமர்சனம்

ஹீரோ ஜஸ்டின் விஜய் (ஜோஷி) தனது மேல் படிப்பை முடித்துவிட்டு தனது படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கும் வரை ஒரு கார் மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். பல கார்களை பழுது பார்க்கும் ஹீரோ ஒரு காரை முழுதும் பழுது பார்த்து முடிப்பதற்குள் கார் டெலிவரி செய்யப்படுகிறது. அந்த காரில் பயணம் செய்தவர்கள் கார் பிரேக் பிடிக்காமல் விபத்துக்குள்ளாகி இறந்து விடுகின்றனர். இதை அறிந்த ஹீரோ ஜோஷி மிகவும் வருத்தமடைகிறார்.இந்த நிலையில் ஜோஷியின் நண்பர்கள் சிலர் அமானுஷ்யங்கள் பற்றி அவரிடம் தெரிவிக்கிறார்கள்.அவர் அதைப்பற்றி தெரிந்து கொள்வதற்காக தனது வேலையை விட்டு அமானுஷ்யங்களை பற்றி படித்து வருகிறார். அமானுஷ்யங்களை பற்றிய வகுப்பு எடுப்பவராக கஸ்தூரி வருகிறார். மாணவர்களுக்கு அமானுஷ்யங்கள் என்றால் என்ன அது எங்கெங்கு உள்ளது என்பதைப் பற்றி சொல்லிக் கொடுக்கிறார். யூட்யூப்சேனல் ஒன்றை நடத்தி வரும் வித்யா பிரதீப் அமானுஷ்யங்களை பற்றிய இன்டர்வியூ எடுக்க ஜோஷியிடம் சில விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்கிறார்,இந்த நேரத்தில் ஜோஷிக்கு அமானுஷ்யம் பற்றிய ஒரு ப்ராஜெக்ட் வருகிறது அதற்காக ஜோஷி வித்யா பிரதீப் இருவரும் ஒன்றாக ஒரு நாள் அந்த அந்த அமானுஷ்யம் உள்ள பங்களாவிற்குள் செல்கின்றனர் ஜோஷியும்,வித்யா பிரதீப்பும். அந்த பங்களாவில் இருவருக்கும் என்ன நடக்கிறது அமானுஷ்யங்கள் இருக்கின்றனவா இல்லையா என்று இரண்டாம் பாதியாக கதை நகர்கிறது.
“ஓஜோ போர்ட்”மூலம் அமானுஷ்யங்கள் இருக்கின்றனவா இல்லையா என்று இருவரும் சோதிக்கின்றனர் அந்த பங்களாவில் ‘பேய்’இருப்பது போல் பயங்கரமாக காட்சிகள் நகர்கின்றன. கடைசியில் அந்த பிரச்னையிலிருந்து இவர்கள் தப்பித்தார்களா? என்ன ஆனார்கள் என்பதே க்ளைமாக்ஸ்.
படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ராபர்ட் மாஸ்டர் நடித்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் மனீஷ் மூர்த்தியும், இசையமைப்பாளர் விஜய் சித்தார்த்தும் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.
படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை த்ரில்லாகவும் தில்லாகவும் எடுத்திருக்கும் இயக்குனர் எஸ் ஏ பிரபு அவர்களை பாராட்டியே ஆகவேண்டும்.

ஸ்டிரைக்கரின் குறி தப்பவில்லை.