நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் முதல் கூட்டம் இனிதே நடைபெற்றது !
பல போராட்டங்களுக்கு பிறகு சுமார் 2 வருடங்கள் கழித்து தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு விஷால் தலைமையிலான நடிகர் சங்க அணி வெற்றி பெற்ற நிலையில், வெற்றிபெற்ற புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட முதல் கூட்டம் நேற்று இனிதே நடைபெற்றது.
இக்கூட்டத்தில்
வாக்கு எண்ணிக்கையை நடத்தி தந்த ஓய்வு பெற்ற நீதியரசர் திரு E.பத்மனாபன் அவர்களுக்கும்,
இவ்வழக்கில், சிரயான முறையிலும்.. நியாயமான முறையிலும் தீர்பளித்த மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்திற்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும்,
சங்க சட்ட ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் திரு.கிருஷ்ணா திரு.ரவீந்திரன், மூத்த வழக்கறிஞர் திரு E. ஓம் பிரகாஷ், திரு MK கபீர், திரு சார்லஸ் டார்வின் மற்றும் பிரவீன் குமார் அவர்களுக்கும் நந்தி தெரிவிக்கப் பட்டது.
வழக்குகளுக்கு சட்ட ஆலோசகருடன் கலந்து ஆலோசனை வழங்கி உறுதுணையாக இருந்த திரு.பூச்சி முருகன், திரு.நாசர், திரு.விஷால், திரு.கார்த்தி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
மாநில உரிமையியல் நீதிமன்ற வழக்கறிஞர் திரு முத்துகுமார், திரு அய்யனார் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் நடத்த இடமளித்த மயிலாப்பூர் புனித எப்பாஸ் பள்ளி நிர்வாகத்திற்கும், வாக்குகளை எண்ண இடம் வழங்கிய Good Shepherd Covent க்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
சங்க வழக்கு, தேர்தல், வாக்கு எண்ணிக்கை என அனைத்திலும் உறுதுணையாக இருந்த ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்கள், மற்றும் காவல்துறையினர், தீயணைப்பு துறையினருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில், ‘நடிகர் சங்க சாரிட்டபிள் அறக்கட்டளை’ புதிய அறங்காவலர் குழு முடிவானது.
தலைவர் திரு நாசர் அவர்கள் அறங்கவலர் குழு நிர்வாக அறங்காவலராகவும்,
அறங்காவலர் குழு உறுப்பினர்களாக பொது செயலாளர் திரு.விஷால், பொருளாளர் திரு.கார்த்தி ஆகியோரும்..
நடிகர் சங்க செயற்குழுவிலிருந்து, திரு ராஜேஷ், திருமதி லதா சேதுபதி, செல்வி கோவை சரளா மற்றும்
பொது குழுவிலிருந்து திரு கமலஹாசன் அவர்கள், திரு பூச்சி முருகன், செல்வி சச்சு (எ) சரஸ்வதி ஆகியோரும் நியமிக்க, செயற்குழு ஒப்புதல் கோரப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சங்கத்திற்கு சட்ட ஆலோசகராக வழக்கறிஞர் திரு கிருஷ்ணா ரவீந்திரன் அவர்களை நியமிக்க செயற்குழு ஒப்புதல் கோரப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சங்க அறக்கட்டளைக்கு கணக்கு தணிக்கையாளர் திரு கந்தசாமி & அசோஸியேட்ஸ் அவர்களை நியமனம் செய்ய செயற்குழு ஒப்புதல் கோரப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சங்க மக்கள் தொடர்பாளர் (PRO) திரு ஜான்சன் அவர்களை நியமனம் செய்ய செயற்குழு ஒப்புதல் கோரப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழு கூட்டம் ஒவ்வொரு மாதம் இரண்டாவது ஞாயிற்றுகிழமை நடத்த செயற்குழு ஒப்புதல் கோரப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.