“வாழ்வின் மகிழ்ச்சி

ஜெயா டிவி யில் வரும் நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு “சிறப்பு பட்டிமன்றம் ”
“வாழ்வின் மகிழ்ச்சி திருமணத்திற்கு முன்பா? திருமணத்திற்குப் பின்பா? ” , என்ற தலைப்பில், சொல்லின் செல்வர் திரு. மணிகண்டன் தலைமையில்

 

பிரபல பேச்சாளர்கள் நல்லாசிரியர் திரு. ரவிக்குமார் ,சொல்லேர் உழவர் திரு. நாராயண கோவிந்தன், நற்றமிழ் நம்பி திரு. காளிதாஸ் திருமணத்திற்கு முன்பே..! என்று வாதிடுகிறார்கள்…… மற்றும்

 

இலக்கிய இளவல் திரு. தாமல் சரவணன், நற்றமிழ் நங்கை திருமதி. அட்சயா,இசைக்கலைமணி இராஜபாளையம் உமாசங்கர் திருமணத்திற்குப் பின்பே…! என வாதாடி தன் பேச்சால் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் “சிறப்பு பட்டிமன்றம்” நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளி தினத்தன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.