ஜின் தி பெட் விமர்சனம்

 

மலேசியாவில் பாடகராக வேலை செய்து கொண்டிருக்கும் முகேன் ராவ் வேலை பறிபோக சென்னைக்கு வர முடிவு செய்து குடும்பத்தினருக்கு பரிசு பொருட்கள் வாங்கச் செல்லும் இடத்தில் நல்ல ஜின்னை வாங்க​ வருகிறார். ஜின் என்பது மனிதர்களை பாதுகாக்க பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக ஜின்கள் படைக்கப்பட்டன. நல்ல ஜின்கள் தன் எஜமானிடம் விசுவாசமாக இருந்து உயிரை கொடுக்கும்,நாளடைவில் விரோதிகளால் கெட்ட ஜின்களும் படைக்கப்பட்டன. அவையின் ஆக்ரோஷம் கொடூரமானதாக இருக்கும் உயிரை எடுக்கும் சூர்ய உதயம் படும் இடத்தில் வைக்கக்கூடாது, தண்ணீர் படக்கூடாது, தினமும் பால், பிஸ்கட் இரவில் 12 மணிமுதல் 5 மணிக்குள் வைக்கவேண்டும் என்பதை தினமும் கடைப்பிடிக்கவேண்டும் என்பது ஜின்னை வளர்க்கும் மூன்று நிபந்தனைகள். ஜின்னுடன் சென்னையில் வந்திரஙகுகறங்குகிறார் முகேன் வந்திறங்கியவுடன் நர்ஸ் பவ்யா திரிகாவை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார்.பின்னர் வீட்டில் பாட்டி,தந்தை,அக்கா,அக்கா கணவர்,அவர்களுடைய மகன் என்று அனைவருக்கும் தான் வாங்கிய ஜின் வளர்க்கும் நிபந்தனைகளைப் பற்றிச் சொல்கிறார்.ஜின் வந்த நேரம் சக்திக்கு நல்லது நடப்பதாக நினைக்க, குடும்பத்தினருக்கோ ஜின் வந்த நேரம் சில சம்பவங்கள் கெட்டதாக நடக்கிறது.அதனால் சக்தியைத் தவிர அனைவரும் ஜின்னை வெறுக்கிறார்கள்.நாளடைவில் சக்தி ஆர் கே ஹாஸ்பிடலில் வேலை செய்யும் நர்ஸ் பிரியாவை துரத்தி துரத்தி காதலித்து திருமணமும் செய்து கொள்கிறார். தொழிலும் வாழ்க்கையும் நன்றாக சென்றுக் கொண்டிருக்கும் போது,அனைவரும் வெளியே சென்றிருக்கும் நேரம்,வீட்டில் தனியாக இருந்த பிரியா அடிபட்டு ரத்த வெள்ளித்தில் சுயநினைவிழந்து ஜின்னின் பெட்டகத்தின் அருகே விழுந்து கிடக்கிறார். வீட்டிற்கு வரும் அனைவரும் பதறியடித்து பிரியாவை மருத்துவமனைக்கு அழைத்துச்; செல்ல,பிரியா கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும்,என்றாவது ஒரு நாள் சுயநினைவு திரும்பும் என்று சொல்லி அனுப்பி வைக்கின்றனர். சக்தி பெறும் மனவேதனையில் இருக்க இதற்கு ஜின் தான் காரணம் என்று கோபத்துடன் ஜின் பெட்டகத்தை வீட்டின் வெளியே வீசிவிடுகிறார். அந்த பெட்டகத்திலிருந்து வெளியே வந்து விடும் ஜின் தன் எஜமானரான சக்தியை பின் தொடர்கிறது. சக்தியையும், பிரியாவையும் விரோதிகளிடமிருந்து காப்பாற்றுகிறது. இறுதியில் பிரியா கொலை செய்ய முயற்சி செய்தவர்கள் யார்? எதற்காக? சக்தி ஜின்னுடன் சேர்ந்து வில்லன்களை பழி தீர்த்தாரா? நல்ல ஜின்னை கொல்ல வரும் கெட்ட ஜின் ஜெயித்ததா? என்பதே கற்பனை கலந்த க்ளைமேக்ஸ்.