கதையின் நாயகன் பிரபாஸ் தனது பாட்டி ஜரினா வஹாப்புடன் ஒரு எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.ஜரினா எல்லாவற்றையும் மறந்து விட்டாலும்,அவர் காணாமல் போன தனது கணவர் சஞ்சய் தத் நினைவுகளை மட்டும் ஒருபோதும் மறப்பதில்லை.தனது கனவுகளில் தோன்றும் தனது கணவரை கண்டுபிடித்து திரும்ப அழைத்து வருமாறு பேரன் பிரபாஸிடம் கேட்கிறார்.தாத்தா சஞ்சய் தத்தை சமீபத்தில் ஹைதராபாத்தில் காணப்பட்டார் என்பதை ஒரு சிலர் கூறுகின்றனர் அதை அறிந்த பிரபாஸ் தனது பாட்டியை பார்த்துக் கொள்ளும்படி தனது நண்பர் ரித்தி குமாரிடம் கூறிவிட்டு,ஹைதராபாத்திற்கு சொல்கிறார்.அங்கு அவர் ஒரு கன்னியாஸ்திரியான நிதி அகர்வாலை சந்திக்கும் போது அவர் மீது காதல் கொள்கிறார்.பின்னர் மாளவிகா மோகனன் அவரது வாழ்க்கையில் நுழைகிறார். தனது தாத்தாவை தேடி பிரபாஸ் பைரவி மற்றும் தனது நண்பர்களுடன் நர்சாபூர் காட்டில் உள்ள ஒரு அரண்மனைக்குச் செல்கிறார். அங்கு அவர் ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மையைக் கண்டறிகிறார்.தனது தாத்தா இறந்துவிட்டார் என்றும்,இப்போது அவர் ஒரு ஆபத்தான ஆவியாக இருக்கிறார் என்றும் அவர் கண்டுபிடிக்கிறார். பிரபாஸ் இதைப் பற்றி ஆழமாக ஆராயும்போது தனது தாத்தா சஞ்சய்தத் பல மாய சக்திகள் கொண்டவர் என்பதை அறிந்ததும் அவரது இருண்ட கடந்த காலத்தையும், அவரது செயல்களை வடிவமைத்த பேராசையையும் வெளிக்கொணர தொடங்கும் போது சஞ்சய்தத் பிரபாஸையும் அவரது நண்பர்களையும் ஹிப்னாடிசம் செய்து தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். அப்போது என்ன நடக்கிறது சஞ்சய்தத்தை பிரபாஸ் எப்படி எதிர்கொண்டார் சஞ்சய்தத் யார் அவருடைய நோக்கம் என்ன அவரது கடந்த காலத்திற்குப் பின்னால் உள்ள உண்மை என்ன பிரபாஸின் வாழ்க்கையில் நுழையும் மாளவிகா மோகனன்,நிதி அகர்வால், மற்றும் ரித்தி குமார் ஆகிய மூன்று பெண்கள் யார் யார் என்பதே படத்தின் மீதிக்கதை.
பிரபாஸ் வழக்கமான அதிரடி மற்றும் பிரம்மாண்டமான கதாபாத்திரங்களில் இருந்து விலகி குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவையான கதாபாத்திரத்தில் தனித்து நிற்கிறார்.
மற்றும் சஞ்சய் தத்,ஜரினா வஹாப், மாளவிகா மோகனன்,நிதி அகர்வால்,ரித்தி குமார்,போமன் இரானி,சத்யா,பிரபாஸ் சீனு,சமுத்திரக்கனி,ரங்கஸ்தலம் மகேஷ், சப்தகிரி,விடிவி கணேஷ் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
தமனின் இசையும்,கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலம்.
வித்தியாசமான திகில் கதையை தேர்ந்தெடுத்து,நகைச்சுவை கலந்து திரைக்கதை அமைத்து அனைவரும் ரசிக்கும்படி தந்துள்ள இயக்குனர் மாருதி அவர்களுக்கு பாராட்டுகள்.
தி ராஜாசாப் நகைச்சுவை கலந்த திகில் .
