தூக்குதுரை விமர்சனம்

கிராமத்தில் மன்னர் வழிவந்த குடும்பத்து வாரிசுகளிடம் ஒரு தங்க கிரீடம் இருக்கிறது. திருவிழா நாளில் மக்கள் தரிசிப்பதற்காக கிரீடத்தை வெளியில் எடுப்பது வழக்கம். இடையில் இருபது வருடங்களாக அந்த கிராமத்தில் திருவிழா நடத்த முடியாமல் போகிறது.
அந்த கிரீடத்தை ஒருநாள் சிலர் திருடிக் கொண்டு ஓடும்போது அது விழுந்து உடைகிறது.தங்ககிரீடம் விழுந்தால் உடையாது போலி என்பதால் விழுந்த உடன் உடைந்து விட்டது இதை கண்டு ஊரே அதிர்கிறது.
அந்த உண்மையான கிரீடம் என்னவானது எங்கு போனது என்பதே மீதிக்கதை.
திருவிழாக்களில் படம் போடுகிற வேலை செய்கிற யோகிபாபு மன்னர் குடும்பத்து வாரிசான இனியா மீது காதல் கொண்டு தன்னை நம்பி வந்த இனியாவுடன் ஊரை விட்டு ஓட முயற்சிப்பது, ஊராரின் தாக்குதலுக்கு ஆளாகி பேயாக சுற்றித் திரிந்து ஊர் மக்களின் உறக்கத்தைக் கெடுப்பது என தனது பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்.
இனியா சில காட்சிகளில் தனது துடிப்பான அனுபவம் வாய்ந்த நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.
மற்றும் மொட்டை ராஜேந்திரன் மகேஷ், பால சரவணன், சென்றாயன் குழுவினரின் காமெடி கலாட்டாக்கள் சிறப்பு.
கே.எஸ். மனோஜின் பின்னணி இசை படத்திற்கு பலம். ரவி
வர்மாவின் ஒளிப்பதிவும் அருமை.
இரண்டு கால கட்டமாக கதையை மிகவும் நேர்த்தியான முறையில் நகர்த்திய இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத்தை பாராட்டியே ஆக வேண்டும்.
தூக்குதுரை காமெடிக்கு பஞ்சமில்லை.