டிரெண்டிங் விமர்சனம்

3 லட்சத்துக்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள்,ஒரு பெரிய பங்களா, வீடு மற்றும் ஒரு கார் ஆகியவற்றைக் கொண்ட தங்கள் யூடியூப் சேனலில் இருந்து அவர்கள் பெறும் வருமானத்துடன் வசதியாக வாழ்கின்றனர்.கலையரசன் மற்றும் பிரியாலயா தம்பதியர்.இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று ஒரு நாள் அவர்களின் யூடியூப் சேனல் நீக்கப்பட்டு எந்த வருமானமும் இல்லாமல் தத்தளித்து கடன் மற்றும் பல சிக்கல்களில் மாட்டிதவிக்கின்றனர்.இந்த மாதிரி நேரத்தில் ஒரு மர்மமான நபர் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாங்கள் ஒரு ரியாலிட்டி ஷோவை நடத்துபவர்கள் என்றும் அதில் தம்பதிகள் பங்கேற்று வெற்றி பெற்றால் அவர்களுக்கு கோடி ரூபாய் பணம் கிடைக்கும் என்றும் கூறுகிறார்.அதே போல இந்த ரியாலிட்டி ஷோ பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என கூறுவது மற்றும் இல்லாமல் பல விதிகளை விதிக்கும் நபர் தம்பதிகளுக்கு இடையிலான இந்த போட்டியை தங்கள் வீட்டில் 7 நாட்கள் விளையாட வேண்டும் என்றும், அவர்கள் கொடுக்கப்பட்ட பணிகளை வென்றால், பரிசுத் தொகை அதிகரிக்கும் அவர்கள் தோல்வியடைந்தால் அவர்கள் வென்ற பரிசுத் தொகையை இழப்பார்கள் என்றும் கூறுகிறார். தம்பதியினர் தங்கள் பணத் தேவைகளுக்காக அவர்களின் கடன் சிக்கல்களிலிருந்து மீளுவதற்காக போட்டியில் பங்கேற்க சம்மதிக்கின்றனர். ஆரம்பத்தில் எளிய போட்டிகளில் சில லட்சங்களை வென்றாலும்அடுத்தடுத்த போட்டிகளில் அவர்கள் எதிர்பாராத பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.இதன் விளைவாக அவர்களின் வாழ்க்கையில் என்ன மாதிரியான பிரச்சினைகள் எழுகின்றன தங்களது இல்லற வாழ்க்கையே கேள்விக்குறியாகும் போது தொடர்ந்து போட்டியில் கலந்து கொண்டனரா இதனால் ஏற்படும் இழப்புகள் என்ன இறுதி வரை போராடி ஜெயித்தார்களா போட்டியில் பங்கேற்ற அவர்களுக்கு பணம் கிடைத்தா என்பதே படத்தின் மீதிக்கதை.
கலையரசன் தனது நடிப்பு திறன்களை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறார்.
பிரியாலயா ஒரு சிறந்த நடிகையாக கதாநாயகனுக்கு இணையான சமமான கதாபாத்திரத்தில் பார்வையாளர்களை அழகிலும் நடிப்பிலும் வசீகரிக்கிறார்.மற்றும் பெசன்ட் நகர் ரவி,வித்யா போர்கியா மற்றும் சிவன்யா ஆகியோரது கதாபாத்திரங்களும் கதைக்கு வலிமை.
ஒளிப்பதிவாளர் பிரவீன் பாலுவின் ஒளிப்பதிவும்,இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையும் படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளன.யூடியூப் உட்பட சமூக ஊடகங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் பலர் இதற்கான பல்வேறு உத்திகளைப் பயன்படுத்துகின்றனர்.அவர்களின் அன்றாட வாழ்க்கை சம்பவங்களைப் பகிர்ந்து கொள்வதோடு மட்டுமல்லாமல்,சிலரது தனிப்பட்ட விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளும் மனித பேராசையைப் பற்றி மிக சிறப்பாகவும் தைரியமாகவும் கூறியிருக்கும் இயக்குனர் சிவராஜ் அவர்களுக்கு பாராட்டுகள்.
டிரெண்டிங் இன்றையகாலகட்டத்திற்கு ஏற்ற அதிர்ச்சிகள் நிறைந்த டிரெண்டிங்கான கதை.