
சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக சிறுவயதிலேயே சிறைக்குச் சென்ற இரண்டு இளைஞர்கள் பாலாஜி முருகதாஸ் , ரெடின் கிங்ஸ்லி சிறையில் இருந்து திரும்பும்போது சொகுசாக ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு காவல்துறைக்கு சவாலாக இருக்கும் கொள்ளையன் தோட்டா ராஜேந்திரன் மைம் கோபி தரும் வேலையை செய்ய ஒப்புக் கொள்கிறார்கள். விரைவில் பணக்காரர்களாக வேண்டும் ஆசையில் வால்வோ பஸ்சை கடத்துகிறார்கள். பேருந்தில் 40 குழந்தைகளும் இரண்டு இளம் பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் NRI என்று இவர்களுக்கு தெரியாது, ஆனால் அவர்களை வைத்து பணம் பறிக்க பெரும் திட்டம் போடுகிறார்கள். அதே நேரத்தில் அவர்கள் அழகில் மயங்கி நண்பர்கள் இருவரும் அவர்கள் மீது காதல் வசப்படுகிறார்கள்.
இதற்கிடையில் பல்வேறு கெட்டப்பில் போலீஸ் இடம் இருந்து தப்பிக்கும் தோட்டா ராஜேந்திரன் பேருந்தில் இருந்த இரண்டு இளம் பெண்களை குறி வைத்து சதித்திட்டத்தை தீட்டுகிறான்.சரவண சுப்பையா தலைமையில் காவல்துறை கடத்தல் காரர்களையும், தோட்டா ராஜேந்திரனை தீவிரமாக தேடுகிறார்கள். அதை தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
பாலாஜி முருகதாஸ் காதல், மோதல் என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
படத்தின் நாயகிகளான மஹானா சஞ்சீவி, காயத்ரி ரேமா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
தீபா, சிங்கம் புலி, ரெடின் கிங்ஸ்லி கதையை காமெடியாக எடுத்து செல்கிறார்கள்.
‘மைம்’ கோபி பலவிதமான கெட்டப்பில் மிரட்டியிருக்கிறார்.
படத்தின் ஏனைய கதாபாத்திரங்களான சரவண சுப்பையா
யோகி ராமசாமி, வையாபுரி, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், பிரபாகரன், போண்டா மணி, மீசை ராஜேந்திரநாத், கிரேன் மனோகர், ரஞ்சன், திலீபன், வடிவேல் பீட்டர் என அனைவரும் அவர்களது பணியைச்சிறப்பாக செய்துள்ளனர்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு தேனிசை தென்றல் தேவா இசையமைத்து அவருக்கே உரித்தான கானாவையும் தந்து அசத்தியுள்ளார்.
கார்த்திக் ராஜாவின் ஒளிப்பதிவு, ராஜா முகமதுவின் எடிட்டிங் படத்திற்கு பலம்.
நகைச்சுவை,விறுவிறுப்பு, சண்டை, காதல், குத்தாட்டம் என படத்தை விறுவிறுப்பாக இயக்கிய இரட்டை இயக்குனர்களான எஸ் பி ஆர், எல்.ஜி.ரவிசந்தர் ஆகிய இருவரையும் பாராட்டியே ஆக வேண்டும்.
‘வா வரலாம் வா’ நகைச்சுவை கலந்த ஆக்ஷன்.
