பெரிய பிரபல தொழிலதிபரான பதம் வேணு குமார் அவர் இறக்கும் போது தன் சொத்துக்களை இரண்டு மகன்களுக்கு சரிசமமாக உயில் எழுதி வைத்துவிட்டு, சென்னையில் இருக்கும் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு அடுக்குமாடி வீட்டை அலக்கியா என்ற பெண்ணுக்கு உயில் எழுதி வைத்து விட்டு இறந்து விடுகிறார். இதனால் கடும் கோபத்திற்குள்ளாகும் மகன்கள் ஊர் பெயர் தெரியாத அலக்கியா விற்கு ஏன் சென்னை வீட்டை எழுதினார் என்று தெரியாமல் தவிக்கிறார்கள். அந்த சென்னை வீட்டை தங்களுக்கு சாதகமாக்கிகொள்ள திட்டம் தீட்டுகிறார்கள் அலக்கியா என்ற பெயரில் வேறு ஒரு பெண்ணை ஆள் மாறாட்டம் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்கின்றனர். நீதிபதியாக இருக்கும் சோனியா அகர்வால், இந்த ஆள் மாறாட்ட பெண்ணின் மேல் சந்தேகம் எழ இந்த வழக்கின் பின்னணியில் உண்மையை விசாரிக்கும் பொறுப்பை நீதிமன்ற சப் இன்ஸ்பெக்டர் விக்ராந்த் இடம் ஒப்படைக்கிறார். சப்இன்ஸ்பெக்டர் விக்ராந்த் அலக்கியா என்ற பெண் போலியானவர் என்பதை கண்டுபிடித்து தகுந்த ஆவணங்களை சமர்பிக்கிறார். நீதிபதி சோனியா அகர்வால் இதனை பரிசீலனை செய்து உண்மையான அலக்கியாவை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு உத்தரவிடுகிறார். இறுதியில் சப்இன்ஸ்பெக்டர் விக்ராந்த்தால் உண்மையான அலக்கியாவை கண்டுபிடிக்க முடிந்ததா அலக்கியாவின் குடும்ப பின்னணி என்ன அலக்கியவிற்கும் பதம் வேணு குமாருக்கும் உள்ள தொடர்பு என்ன எதனால் பதம் வேணு குமார் இரண்டு கோடி மதிப்புள்ள வீட்டை எழுதி வைத்தார் அலக்கியாவிடம் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.
நீதிபதியாக சோனியா அகர்வால் வித்தியாசமாக தனக்குரிய பாணியில் சிறப்பாக நடித்துள்ளார்.
விக்ராந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக சிறப்பாக நடித்துள்ளார்.மற்ற கதாபாத்திரங்களான அலக்கியா,பிர்லா போஸ்,பதம் வேணு குமார்,மோகன் ராமன்,‘லொள்ளு சபா’சுவாமிநாதன் மற்றும் பலர் படத்தில் சிறப்பாக அவர்களது பணியை செய்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் டி.எஸ்.பிரசன்னாவின் ஒளிப்பதிவும்,இசையமைப்பாளர் சௌரப் அகர்வாலின் இசையும்,படத்திற்கு பலம்.
பலதரப்பட்ட பிரச்சனைகளை கையிலெடுத்து சஸ்பென்சாக திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் இயக்குனர் சிவராமன் அவர்களுக்கு பாராட்டுகள்.
வில் வில்லங்கம் நிறைந்த அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது.
