ஆரம்பம் பட ” ஸ்டைலிஷ் தமிழச்சி ” நடிகையின் அடுத்த அவதாரம்

ஆரம்பம் பட ” ஸ்டைலிஷ் தமிழச்சி ” நடிகையின் அடுத்த அவதாரம்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னட திரையுலகில் மாடல் மற்றும் நடிகையாக விளங்குபவர் அக்ஷ்ரா கௌடா. இவர் தமிழில் உயர்திரு 140 படத்தில் அறிமுகமானார், அதன் பின்னர் துப்பாக்கி, ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஆரம்பம் படத்தில் அவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. தற்போது அவர் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து இடியட் எனும் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் சூரபனங்காய் எனும் படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். நல்ல கதைக்களம் கொண்ட சிறந்த படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.