பல மருத்துவத் துறைகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் ஹெர் (HER) பெண்கள் நலன் மற்றும் நீண்ட ஆயுள் மாநாடு!

 

*பல மருத்துவத் துறைகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் ஹெர் (HER) பெண்கள் நலன் மற்றும் நீண்ட ஆயுள் மாநாடு!*

பெண்களின் உடல்நலம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக இந்தியாவில் நடைபெறும் முதல் பல்துறை மாநாடுகளில் ஒன்று HER. இந்த மாநாட்டினை Be The One கிளினிக் நிறுவனர் டாக்டர் இர்ஃபானா சாகுல் ஹமீத் முன்னெடுத்தார்.

*சென்னை, செப்டம்பர் 20, 2026:* Be The One Longevity Centre நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கிளினிக்கல் இயக்குநரான டாக்டர் இர்ஃபானா ஹமீத், பெண்களின் உடல்நலம் மற்றும் நீண்ட ஆயுளை மையமாகக் கொண்ட HER – வுமன்ஸ் ஹெல்த் & லான்ஜெவிட்டி சப்மிட் மாநாட்டை செப்டம்பர் 19 ஆம் தேதி தேனாம்பேட்டையில் உள்ள ஹோட்டல் புல்மேனில் நடத்தினார். பெண்களின் உடல்நலம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக இந்தியாவில் நடைபெறும் முதல் பல்துறை மாநாடுகளில் ஒன்றான HER மாநாடு, பெண்களின் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் ஏற்படும் உடல்நலத் தேவைகளை வெவ்வேறு மருத்துவத் துறைகளின் கோணத்தில் அலசி ஆராய்ந்தது.

ஒருநாள் நடைபெற்ற இந்த மாநாட்டில், பெண்களின் சுகாதாரம் சார்ந்த பல்வேறு அம்சங்கள் குறித்து மருத்துவ நிபுணர்கள் கலந்துரையாடினர். நோய்த் தடுப்பு, நவீன மருத்துவ அணுகுமுறைகள், நீண்ட ஆயுள் மற்றும் பெண்களின் மாறிவரும் மருத்துவத் தேவைகள் ஆகியவை முக்கியமாக விவாதிக்கப்பட்டன. டாக்டர் இர்ஃபானா மற்றும் Be The One நிறுவனத்திற்கு ஒரு முக்கியமான புதிய அத்தியாயத்தையும் இந்த மாநாடு தொடங்கி வைத்தது. Be The One Longevity –Women என்ற பிரத்யேக ஃபெம்டெக் முயற்சியும் HER மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. பெண்கள் தங்களது உடல்நலன் பற்றி அதிக விழிப்புணர்வுடனும் பொறுப்புடனும் செயல்பட உதவும் வகையில் இது உருவாக்கப்பட்டது.

 

HER மாநாட்டின்போது இதனை டாக்டர் இர்ஃபானா அறிமுகப்படுத்தினார். மாநாட்டிற்குத் தலைமை வகித்த நேச்சுரல்ஸ் சலூன் நிறுவனத்தின் நிறுவனர் சி.கே. குமரவேல், இதனைத் தொடங்கி வைத்தார். பெண்களின் உடல்நலம் தொடர்பான தகவல்கள் மற்றும் கண்காணிப்பு வசதிகளை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்தகட்ட வளர்ச்சியில் மாதவிடாய் சுழற்சி கண்காணிப்பு, அணியக்கூடிய தொழில்நுட்பங்கள் மற்றும் கூடுதல் உடல்நலக் கண்காணிப்பு வசதிகள் உள்ளிட்டவை இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பெண்கள் தங்களது உடல்நலன் குறித்த தகவல்களை தெளிவாக அறிந்துகொள்ளவும், அதன் அடிப்படையில் அதிக விழிப்புணர்வுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து, உடல்நலனை பேணிக்காக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற டாக்டர் இர்ஃபானாவின் தொலைநோக்குப் பார்வையை இந்த முயற்சி பிரதிபலிக்கிறது.

இது குறித்து டாக்டர் இர்ஃபானா ஹமீத் பகிர்ந்து கொண்டதாவது, “பெண்களின் உடல்நலனை தனித்தனியாகப் பார்க்க முடியாது. ஒரு பெண்ணின் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள், அடுத்த கட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அதனால்தான் உடல்நலமும் நீண்ட ஆயுளும் ஒன்றாக இருக்க வேண்டும். HER மாநாட்டின் மூலம் பல்வேறு மருத்துவத் துறைகளை ஒரே தளத்தில் இணைக்கிறோம். அதே நேரத்தில், தொழில்நுட்பம் மற்றும் நீண்ட ஆயுளுக்கான மருத்துவ அணுகுமுறைகளைப் பயன்படுத்தி பெண்களுக்கான சுகாதாரத்தை மேலும் ஒருங்கிணைந்ததாக மாற்றும் அடுத்தகட்ட முயற்சியையும் தொடங்குகிறோம்” என்றார்.

ஃபெம்டெக்குடன் இணைந்து, Be The One நிறுவனத்தில் பெண்களுக்கான பிரத்யேக Women’s Longevity பிரிவுகளையும் டாக்டர் இர்ஃபானா அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் பெண்களுக்கான நோய்த் தடுப்பு சுகாதாரம் மற்றும் ஹெல்தி ஏஜிங் தொடர்பான சேவைகளில் நிறுவனம் கவனம் செலுத்தும். பெண்களின் உடல்நலத் தேவைகள் காலப்போக்கில் எவ்வாறு மாறுகின்றன என்பதைப் பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இந்த மாநாட்டில் ஆராய்ந்தனர். நோய்த் தடுப்பு, நவீன மருத்துவ அணுகுமுறைகள், நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியமான முதுமை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. பெண்களின் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களையும் கருத்தில் கொண்டு, அவர்களது உடல்நலனை மேலும் விரிவான மற்றும் ஒருங்கிணைந்த பார்வையில் அணுக வேண்டியதன் அவசியத்தையும் இந்த மாநாடு வலியுறுத்தியது.

*டாக்டர் இர்ஃபானா ஹமீத் பற்றி:*

டாக்டர் இர்ஃபானா ஹமீத், சென்னையில் உள்ள Be The One Longevity Centre நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கிளினிக்கல் இயக்குனர். மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணரான இவர், பெண்களின் உடல்நலத் துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். பெண்கள் தங்களது உடல்நலத்தில் முன்கூட்டியே அதிக கவனம் செலுத்தி, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதையே தனது பணியின் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளார்.

 

Be The One Longevity Centre மூலம், தனது பணியை ஃபெம்டெக் மற்றும் பெண்களுக்கான நீண்ட ஆயுள் மருத்துவம் ஆகிய துறைகளிலும் விரிவுபடுத்தி வருகிறார். தொழில்நுட்பம் மற்றும் பல்துறை மருத்துவ அணுகுமுறைகளை ஒருங்கிணைத்து, பெண்கள் சுகாதாரத்தின் அடுத்தகட்டத்தை உருவாக்கும் நோக்கில் அவர் செயல்பட்டு வருகிறார்.