இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயீஷா சைகல், போமன் ஐரணி, சமுத்திரக்கனி மற்றும் பல திரையுலக முன்னணி நடிகர்கள் நடித்துள்ள அதிரடி மற்றும் கமெர்சியல் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தனது தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் கே.வி.ஆனந்த் கூட்டணியில் அயன், மாற்றான் திரைப்படத்தினை தொடர்ந்து உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படமாகும். காப்பான் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் எம் எஸ் பிரபு ஒளிப்பதிவில் படத்தொகுப்பாளர் ஆன்டனி எடிட்டிங் பணிசெய்துள்ளார்.
சூர்யா வழக்கம் போல் ஒன் மேன் ஷோ தான், பிரதமரை காப்பாற்றும் ஆபிசர், துறுதுறுவென படம் முழுவதும் அவருடைய பார்வை போல் கதாபாத்திரமும் அமைந்துள்ளது. பைனலி சூர்யா இஸ...