ரோஹித் சுரேஷ் ஷரஃப், தமிழுக்கு வந்திருக்கும் ஹேண்ட்சம் ஹீரோ !

ரோஹித் சுரேஷ் ஷரஃப்,
தமிழுக்கு வந்திருக்கும் ஹேண்ட்சம் ஹீரோ !

ஒரு பெண்ணின் கல்விப்பயணத்தை, அவளது அக சிக்கல்களை, தற்காலத்திய உலகின் நடைமுறைகளோடு அழகாக சொல்லியிருக்கும் படம் “கமலி From நடுகாவேரி”. சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைவரது பாராட்டுக்களை பெற்றுள்ளது. இப்படத்தில் நாயகனாக தமிழில் அறிமுகமாகியிருக்கும் ரோஹித் சுரேஷ் ஷரஃப் ஹேண்ட்சம் லுக்கில், அற்புத நடிப்பில் இளஞர்கள் அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.

நடிகர் ரோஹித் சுரேஷ் ஷரஃப் தனது நடிப்பு பயணத்தை இந்தி தொலைக்காட்சி மூலம் தொடங்கியவர்.. ஷாருக்கான், ஆலியா பட் நடிப்பில் வெளியான Dear Zindagi படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். Hichki, The sky is pink, போன்ற படங்களில் நடித்தவர், சமீபத்தில் வெளியாகி பெரும் பாராட்டுக்களை குவித்த Ludo படத்தில் நான்கு பேரில் ஒரு நாயகனாக நடித்துள்ளார். உலகளவில் பாராட்டுக்களை குவித்து, பல திரைவிழாக்களில் கலந்துகொண்ட “what will people say” எனும் நார்வே படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

உலகம் முழுக்க அறிமுகமான நடிகராக மிளிரும் இவர், தமிழில் “கமலி From நடுகாவேரி” படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். சின்ன மகேஷ்பாபு என பாராட்டு பெற்றிருக்கும் இவருக்கு, “கமலி From நடுகாவேரி” வெற்றிக்கு பிறகு, தென்னிந்திய மொழிகளில் இருந்து நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தமிழ் ரசிகர்கள் தந்து வரும் பெரும் ஆதரவும், பாராட்டுக்களும் தன்னை நெகிழ்ச்சியூட்டுவதாகவும், அடுத்தடுத்து வரும் வாய்ப்புகளில் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து தென்னிந்திய மொழிகளில் நடிக்கவுள்ளதாகவும் தெரிவுத்துள்ளார் ரோஹித் சுரேஷ் ஷரஃப்.