ஸ்டெப்ஸ்(STEPS) பெப்சி(FEFSI) இடையே தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் சுமூகமாக கையெழுத்தானது !

ஸ்டெப்ஸ் (STEPS) பெப்சி (FEFSI) இடையே தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் சுமூகமாக கையெழுத்தானது !

சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் (STEPS) மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEPSI) இரண்டும் சேர்ந்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு சம்மந்தமான பேச்சுவார்த்தையை சுமூகமாக நடத்தி முடித்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக இரு சங்கங்களுக்கும் இடையேயான ஒப்பந்தம் இன்று  (28 – 11-2019 வியாழன்) கையெழுத்தானது.

அந்த கூட்டத்தில்  இரு சங்கங்களின் சார்பாக கலந்துகொண்டவர்கள் விபரம் வருமாறு :-

சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (STEPS) சார்பாக கலந்துகொண்டவர்கள் 1,திருமதி.சுஜாதா விஜயகுமார் -தலைவர்  2, திருமதி. குஷ்பு சுந்தர் – பொதுசெயலாளர் , 3,திரு. D.R.பாலேஷ்வர் – பொருளாளர் 4, திரு.T.V.சங்கர்-இணைச்செயலாளர் 5, திரு. ஹேமந்த்குமார் , செயற்குழு உறுப்பினர் .

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் (FEFSI) சார்பாக 1.திரு.R.K .செல்வமணி – தலைவர் , 2. A. சண்முகம்- செயலாளர் , 3.திரு B.N.சுவாமிநாதன் – பொருளாளர்,  மற்றும் பெப்சி நிர்வாகத்தை சேர்ந்த இன்னும் சிலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் முடிவில் இரு சங்கங்களின் சார்பாக உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நட்பு பாராட்டி நன்றி தெரிவித்துக்கொண்டனர்.