சூர்யராஜ் வேதகிரி மலையில் ஒரு மருத்துவக் கல்லூரிக்கு மாணவனாக வருகிறார்.அந்த கல்லூரி விடுதியில் 15 வருடங்களாக 418 எண் அறை பூட்டியே இருக்கிறது.அந்த அறைக்கு பக்கத்திலுள்ள ஒரு அறையில் சூர்யராஜ் தங்குகிறார்.இரவு நேரங்களில் அவருக்கு சில அமானுஷ்யங்கள் நடக்கின்றன.இதனால் மனதளவில் பாதிக்கப்படுகிறார்.அவரது நண்பர்கள் அக்கல்லூரியின் மனநல மருத்துவரிடம் காட்டுகிறார்கள். அம்மருத்துவர் அப்பொழுதுதான் அந்த 418 வது அறையின் மர்மத்தை விவரிக்கிறார். சைத்ரா குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தீராத ஆசையினால் ஷைத்தானை வணங்குகிறார்.தனக்கு 6 நபர்களை நரபலி கொடுத்தால் உனக்கு குழந்தை பிறக்கும் என்று ஷைத்தான் கூறுகிறது.அதற்காக தனது கணவரின் உறவுக்கார பெண்கள் மூன்று பேர்களை நரபலி கொடுக்கிறாள் சைத்ரா. நான்காவது நரபலி கொடுக்கும்போது சைத்ரா இறந்து விடுகிறாள்.மீதமுள்ள மூன்று நரபலியை சைத்ராவின் ஆவி கொடுக்க முயற்சிப்பதே மீதிக்கதை.
சைத்ரா தனது முழுத்திறமையையும் வெளிப்படுத்தி சிறப்பாக நடித்துள்ளார்.
மற்றும் சூரியராஜ் வீரபத்தினி,சரண் லக்கராஜு,ரமேஷ் இந்திரா,பிரீத்தி பகதாலா,சஷாங்க் பாட்டீல் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
வெங்கி ஜி.ஜி அவர்களின் இசை கதைக்கு மிகப்பெரிய பலம்.
இப்படி ஒரு கற்பனை கதையை கையில் எடுத்து பார்வையாளர்களை அச்சமூட்டுவது ஒன்றையே குறிக்கோளாக கொண்டு சிறந்த முறையில் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் இயக்குனர் கீர்த்தன் நடகவுடா அவர்களுக்கு பாராட்டுகள்.
418 அமானுஷ்யம் நிறைந்த த்ரில்லர்.
Get real time updates directly on you device, subscribe now.