சில நொடிகளில் விமர்சனம்

லண்டனைச் சேர்ந்த காஸ்மெடிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜ் வரதன் ரிச்சர்ட் ரிஷி தனது மனைவி மேதாவுடன்
புன்னகைபூ கீதாவுடன் வசித்து வருகிறார். சமூக சேவகியுமான மனைவி மேதாவின் உதவி மற்றும் பெருமுயற்சி காரணமாக தனியாக கிளினிக் வைத்து நடத்தும் அளவிற்கு லண்டனில் பெரிய அளவில் புகழ் பெற்று பணம் செல்வாக்குடன் வாழ்கிறார். பெரிய மாடல்களுக்கும்,பிரபலங்களுக்கும் முக்கிய ஆலோசகராக விளங்கும் டாக்டர் ராஜ் வரதன் தன்னிடம் சிகிச்சைக்காக வரும் மாடல் அழகி மாயா பிள்ளையின் யாஷிகா ஆனந்த் மீது காதல் ஏற்பட அது கள்ளக்காதலாக மாறுகிறது. இருவரும் சேர்ந்து வாழ நினைக்கும் வேளையில் எதிர்பாராத சம்பவம் நடக்கின்றது. ராஜ் வரதனுடன் வீட்டில் சந்தோஷமாக இருக்கும் வேளையில் அதிக போதை பொருள் எடுக்கும் மாயா பிள்ளை இறந்து விடுகிறார். இதனால் அதிர்ச்சியடையும் ராஜ் வரதன் தன் மனைவிக்கு தெரியாமல் மாயாபிள்ளையை அப்புறப்படுத்தி வெறொரு இடத்தில் புதைத்து விடுகிறார். அது முதல் காதலி இழந்த சோகம்,குற்ற உணர்வில் சிக்கி தவிக்கும் ராஜ் வரதன் குழப்பமான மனநிலையில் இருக்கிறார். இந்த சமயத்தில் அவரது கிளினிக்கிற்கு பேட்டி எடுக்க வரும் பெண் பத்திரிகையாளர் ஒருவர் மாயா பிள்ளை இறந்த விவகாரத்தை சொல்லி ராஜ் வரதனை மிரட்டி பணம் கேட்கிறார். இதனால் மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாகும் ராஜ் வரதன் தன் மனைவி மேதாவிடம் உண்மையை சொல்கிறார். முதலில் அதிர்ச்சியாகும் மேதா பின்னர் தன் கணவனுக்கு உதவ முன் வருகிறார். மேதா கணவர் ராஜ் வரதனை மீட்டாரா மாயா பிள்ளைக்கு நடந்த சம்பவம் தற்செயலா கொலையா மிரட்டல் விடுக்கும் பெண்ணிற்கு இது எப்படி தெரியும் ராஜ் வரதன் அவளுக்கு பணம் கொடுத்தாரா இறுதியில் என்ன நடந்தது இதற்கெல்லாம் யார் காரணம் என்பதே படத்தின் மீதிக்கதை.
ரிச்சர்ட் ரிஷி, பிரபல டாக்டராகப் கச்சிதமாக பொருந்தி, பல விதமான பரிமாணங்களை காண்பித்து இயல்பாக நடித்துள்ளார்.
மனைவி மேதாவாக புன்னகை பூ கீதா தனது திறமையான நடிப்பை வெகு சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.சிறப்பாக நடணமும் ஆடியுள்ளார்.
யாஷிகா ஆனந்த் மாடல் அழகியாகவே தன்னை மாற்றி வாழ்ந்து காட்டியுள்ளார்.
மற்ற அனைத்து நடிகர்களும் சிறப்பாகவே நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் அபிமன்யு சதானந்தன் லண்டன் அழகை மிக அழகாக பிரதிபலித்துள்ளார்.
ஷைஜல் பிவியின் எடிட்டிங் படத்திற்கு மற்றொரு பலம்.
பிஜோன் சுராரோ,தர்ஷன்.கே.டி, ஸ்டக்காடோ,ரோஹித் மாட் ஆகிய ஐந்து இசையமைப்பாளர்கள் பட்டையை கிளப்பியுள்ளனர். பாடல்கள் பின்னணி இசை அனைத்தும் அருமை.
இயக்குனர் வினய் பரத்வாஜ் காதல் த்ரில்லர் சஸ்பென்ஸ் என்ற மூன்றையும் சேர்த்து அனைவரது கவனத்தை ஈர்த்து தன் முதல் படத்திலேயே வெற்றியும் கண்டுள்ளார் அவருக்கு பாராட்டுக்கள்.
சில நொடிகளில் அருமையான காதல் த்ரில்லர்.