பழைய நினைவுகளை இழந்து நோயால் பாதிக்கப்பட்ட ஜெய் ஆகாஷ் அவரது மனைவி அக்ஷயா கந்தமுதன் அப்பா தங்கை நாலு பேரும் புது வீட்டிற்கு குடிபோகிறார்கள்.
இரவு தூங்கும் நேரத்தில் மாடியில் ஏதோ சப்தம் கேட்க சென்று பார்க்கையில், அங்கு யாரும் இல்லை எல்லாம் மாய தோற்றம் தான் என்று மனைவி சொல்ல அதை கேட்டு அமைதியாக வந்து விடுகிறார் ஜெய் இப்படி தினமும் தொடர்வதால் ஜெய்க்கு சந்தேகம் எழுகிறது. தொடர்ச்சியாக மனைவியும் தங்கையும் சேர்ந்து, தன்னை ஏமாற்றுகிறார்கள் என்றும் அப்பா என்று சொல்லும் அப்பாவும் உண்மையானவர் இல்லை என்று தெரிந்து அதிர்ந்த ஜெய்க்கு, நீ ஒரு கொலைகாரன் என்று சொல்ல, உண்மையில் ஜெய் யார் அவர் யாரை கொலை செய்தார் அப்பா மனைவி தங்கை என்று நடிக்கும் மூவரும் யார் இறுதியாக மறதி நோயில் இருந்து வெளி வந்தாரா என்பதே ஜெய் விஜயம்.
ஜெய் யாக வரும் ஜெய் ஆகாஷ் படத்தின் அனைத்து காட்சிகளிலும் தனது பணியை சிறப்பாக ஆற்றியுள்ளார் அவருக்கு பாராட்டுகள் .
நாயகி அக்ஷயா அழகான தோற்றத்தில் சிறப்பான முறையில் குடுத்த பாத்திரத்தை நிறைவாக நடித்துள்ளார்.
முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று ஏசிபி ராஜேந்திரன் சிறப்பாக நடித்துள்ளார்.
மைக்கேல் அகஸ்டின் மற்றும் அட்சயா ரே ஆகியோர் அவர்களின் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் பால்பாண்டி மிகவும் அழகாக ஒவ்வொரு நிகழ்வுகளையும் காண்பித்துள்ளார்.
சதிஷ் குமார் இசை படத்திற்கு பலம்.
இயக்குனர்ஜெய்சதீஷன் நாகேஸ்வரன் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு குறையாமல் இயக்கியுள்ளார் அவரைப் பாராட்டியாக வேண்டும்.
ஜெய் விஜயம் சிறப்பு.
