ரியா, அபிராமி, அனுஷா மூன்று பேரும் பள்ளி பருவத்து இணை பிரியா தோழிகள் பள்ளியில்படித்து முடித்தவுடன் கல்லூரிக்கு செல்லும் வயதில் இவர்கள் மூன்று பேருக்கும் காதல் மீது ஒரு ஈர்ப்பு வருகிறது, அதனை ஜாலியாக அனுபவித்து பார்க்க வேண்டும் என்று ஆசை ஏற்படுகிறது.
பள்ளியில் தங்களது இன்னொரு தோழியின் அக்கா திருமணத்திற்கு செல்வதாக தங்கள் பெற்றோர்களிடம் பொய் சொல்லிவிட்டு தன் ஆண் நண்பர்களுடன் குதூகலமாக இருக்க பார்ட்டிக்கு செல்ல திட்டம் போடுகின்றனர். தங்களது ஆண் நண்பர்கள் வருண்,சிக்கு, ஆரோன் ஆகிய நண்பர்களுடன் காரில் புறப்பட்டு செல்கின்றனர். இவர்கள் சென்றவுடன் தான் பெற்றோர்களுக்கு அபிராமியின் தொலைந்த போனின் மூலம் மகள்களின் போக்கும்,தடம் மாறும் எண்ணத்தையும் கண்டு அதிர்கின்றனர்.கீர்த்தி, வெங்கட்ராமன், சந்தோஷ் மூவரும் சேர்ந்து தங்கள் மகள்;களை தேடி செல்கின்றனர். பெற்றோர்கள் தங்கள் மகள்களை கண்டுபிடித்தார்களா விபரீதம் ஏற்படுவதற்குள் தடுத்து நிறுத்தினார்களா என்பதே படத்தின் மீதி கதை.
நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகிய மூவரும் இளம் பருவத்தில் தாங்கள் செய்வது தவறு என்பதை அறியாமல் ஒரு ஆர்வத்தில் செய்வதை அழகாக தங்கள் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.
சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன் மற்றும் ரசீம் ஆகியோர் தங்களது இளமை துள்ளல் களை ரசிக்கும் படி காண்பித்து நடித்துள்ளனர்.
மூன்று பெண்களின் பெற்றோர்களாக வரும் சுரேகா வாணி,ஸ்ரீPமன்,ராஜகோபால் ஆகியோர் உண்மையான பெண்களின் பெறோர்களை கண்முன் நிறுத்துகிறார்கள்.
கொளஞ்சி குமார் அவர்களின் ஒளிப்பதிவும் பால முரளி பாலு இசையும் கதைக்கு நன்றாக ஒத்துழைப்பு கொடுத்துள்ளது.
விஜய் வேலு குட்டியின் படத்தொகுப்பு படத்திற்கு பலம்.
இந்த காலத்து டீன் ஏஜ் பெண்களும் ஆண்களும் எப்படியெல்லாம் தடம் மாறுகிறார்கள் எனபதை சுட்டிக் காட்டி பெற்றோர்களும் கவனமாக இருக்க வேண்டும் என்பதனையும் அழகாகவும் ஆழமாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்
இயக்குனர் முத்து.
சிக்லெட்ஸ் அனைத்து பெற்றோர்களும் பார்க்க வேண்டும்.
