நாயகன் ஜெயம் ரவி செய்யாத கொலைக்காக ஆயுள்தண்டனை பெற்று 14 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். பரோலில் தனது மகளை பார்க்க ஊருக்கு வருகிறார். அப்பா கொலைகாரன் என்பதால் அவருடன் பேச மறுக்கிறார் பள்ளிக்குச் செல்லும் மகள். மனைவியும் இல்லை. இந்த நிலையில் ஊரில் அடுத்தடுத்து ஒரே சாதிக் கட்சி தலைவர்கள் இருவர் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர். இதன் விசாரணையை இன்ஸ்பெக்டரான கீர்த்தி சுரேஷ் விசாரித்து வருகிறார். பரோலில் இருந்து வந்த ஜெயம் ரவி மீது கீர்த்தி சுரேஷுக்கு சந்தேகம் வருகிறது. உண்மையில் ஜெயம் ரவி தான் கொலை செய்தாரா அவரது மகள் அவருடன் பேசினாரா செய்யாத கொலைக்காக ஏன் ஜெயம் ரவி ஆயுள் தண்டனை அனுபவிக்கிறார் என்பதுதான் இப்படத்தின் மீதிக்கதை.
நாயகன் ஜெயம் ரவி இருவேறு தோற்றத்தை காணபித்து பார்ப்பவர்களை அசத்தியுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் இன்ஸ்பெக்டராக வித்தியாமாகவும் வேகமாகவும் நடித்து நம்மை அசரவைத்துள்ளார்.
கான்ஸ்டபிளாக வரும் யோகி பாபு வழக்கமான அவரது காமெடியை தந்துள்ளார்.
அனுபமா பரமேஸ்வரன் வாய் பேச முடியாத காது கேட்காத நர்ஸ்ஸாக வந்து தமது பணியை சிறப்பாக செய்துள்ளார்.
அழகம் பெருமாள்,அஜய்,சமுத்திரக்கனி ஆகியோர் வில்லன்களாக நடித்து கதையின் வேகத்தை கூட்டியிருக்கின்றனர்.
ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் கேட்கும் படி அமைந்துள்ளது.
சாம் சி எஸ்ஸின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.
எஸ்கே செல்வகுமாரின் ஒளிப்பதிவு ரூபனின் படத்தொகுப்பும் படத்திற்கு கூடுதல் பலம்.
அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் முதல் படம் போல் இல்லாமல் எல்லோரும் ரசிக்கும் வகையில் தந்துள்ளார் அவருக்கு பாராட்டுகள்.
சைரன் ஒளியும் ஒலியும் இனிமை.
