கிளாஸ்மேட்ஸ்’ விமர்சனம்

கதையின் நாயகன் அங்கையற்கண்ணனும், அவரது மாமா இயக்குநர் சரவண சக்தியும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் இவர் கள் செய்கிற அத்தனை அடாவடிகளையும் அட்டகாசமாக செய்திருக்கிறார்கள்.
ஹீரோவுக்கு ஜோடியாக வருகிற பிரணா அழகாக இளமையாக இருக்கிறார். சரவண சக்திக்கு ஜோடியாக வருபவர் தேகத்தின் செழுமையில் கவர்ச்சியாகத் தெரிகிறார்.
இருவரும் அவரவர் கணவன்மார்களின் குடிபழக்கத்தை பெரிதாய் எடுத்துக் கொள்ளாமல் இருக்கின்றனர்.
இவர்கள் இருவரும் இப்படி திரிவதால் சின்னச் சின்ன பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள்.ஒரு கட்டத்தில் பெரியளவிலான சிக்கல் அவர்களுக்க வருகிறது.
அது என்ன மாதிரியான சிக்கல் அதிலிருந்து அவர்களால் அதிலிருந்து தப்பிக்க முடிந்ததா அதோடு குடிப்பழக்கத்தை நிருத்த முடிந்ததா திருந்தினார்களா என்பதே மீதிக்கதை.
நாயகன் அங்கையற்கண்ணன் ஹீரோ மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார் வாழ்த்துக்கள் பாராட்டுகள் நடிப்பையும் திறமையாக நடித்துள்ளார்.
பிரணா அழகாகவும் அருமையாகவும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
மயில்சாமி வழக்கம்போல் குடிகாரராக வந்துபோகிறார்.
கார்த்திக்,சாம்ஸ்,அருள் தாஸ்,மீனாள் என மற்றவர்கள் அவரவர் நடிப்பில் குறைவைக்கவில்லை.
பிரித்வி இசையில் பாடல்கள் கேட்கும் படி உள்ளது.
அருண்குமார் செல்வராஜ் அவர்களின் ஒளிப்பதிவும், எம்.எஸ் செல்வம் படத் தொகுப்பும் படத்திற்கு கூடுதல் பலம்.
இயக்குனர் சரவண சக்தி குடிப்பழக்கத்தின் தீமைகளை எடுத்துச் சொல்ல நினைத்தது நல்ல விஷயம்தான் இன்னும் கொஞ்சம் ஆழமாக சொல்லி இருக்கலாம்.
கிளாஸ்மேட்ஸ் குடிகாரர்கள் திருத்துவதற்கு.