ஜே பேபி விமர்சனம்!

ஜே பேபி இது ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். கதையில் ஜே பேபியாக வாழ்ந்திருக்கும் ஊர்வசிக்கு இரண்டு மகள்கள் மூன்று மகன்கள். அனைவருக்கும் திருமணம் முடித்து விட்டு ஒவ்வொருவர் வீட்டிலும் மாறி மாறி இருந்து வருகிறார். வயது அதிகமான காரணத்தால் அடிக்கடி மறதியும் படபடப்பும் ஏற்பட்டு தான் செய்வது என்னது என்று அறியாமல் செய்து விடுகிறார். ஒருசில நேரங்களில் தான் வீடு என்று நினைத்து மற்றவர் வீட்டை பூட்டி விடுவது,யாரிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசி பிரச்சினையை கொண்டு வருவது, அடிக்கடி எதாவது வில்லங்கம் செய்வது என இருக்கிறார்.இது அவரது பிள்ளைகளுக்கு பிரச்சினையை ஏற்படுத்துகிறது.இதனால் பிள்ளைகள் ஒன்று கூடி ஒரு முடிவு எடுத்து அவரை மனநல மருத்துவமனையில் சேர்த்து பார்த்துக் கொள்கின்றனர்‌.அங்கு இருப்பவர்கள் அனைவருடனும் அன்பாக பழகுகிறார்.ஒருநாள் திடிரென ஒரு எண்ணம் இவர் மனதில் தோன்றுகிறது இவரை விட்டுவிட்டு பிள்ளைகள் அனைவரும் வீட்டிற்கு சென்றுவிடும் வேளையில் இவர்களுக்கு தன்மீது பாசம் இல்லை என்று நினைத்து அங்கிருந்து கிளம்பி சென்றுவிடுகிறார்.கிளம்பி சென்றவர் கொல்கத்தாவில் இருப்பதாக கொல்கத்தா போலீஸ் உள்ளூர் போலீசுக்கு தகவல் தர தினேஷ் மற்றும் மாறன் இருவரும் ஊர்வசியை சென்று கூட்டி வருமாறு போலீசார் எச்சரித்து அனுப்புகின்றனர்.அங்கு மூர்த்தி என்பவரது தொடர்பு எண்ணையும் தந்து அனுப்புகின்றனர் அண்ணன் தம்பிகளான மாறன் மற்றும் தினேஷ் இருவரும் ஒரு பிரச்சினையில் இருந்து பேசிக் கொள்வது இல்லை.இப்படி பட்ட நிலையில் இருவரும் எப்படி மொழி தெரியாத ஊருக்கு சென்று தனது அம்மாவை அழைத்து வந்தார்களா அவர் மீண்டும் இவர்களுடன் சேர்ந்தாரா என்பதே மீதிக்கதை.
தாயின் கதா பாத்திரத்தில் வாழ்ந்தே இருக்கிறார் ஊர்வசி.விருது நிச்சயம்.
தினேஷ் இந்த கதைக்காக கொஞ்சம் சதை போட்டு பாத்திரமாகவே மாறி நடித்துள்ளார்.
மாறன் தனது எதார்த்தமான நடிப்பாலும் நகைச்சுவையாலும் பாராட்டுகளை அள்ளுகிறார்.
ஏனைய கதா பாத்திரங்களான சேகர் நாராயணன், மெலடி டார்கஸ், தாட்சாயிணி இஸ்மத் பானு, சபீதா ராய் ,மாயா ஸ்ரீ அனைவரும் அந்தந்தப் பாத்திரங்களாகவே உருமாறி இருக்கிறார்கள்.
டோனி பிரிட்டோவின் இசையும், ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவும் எதார்த்தம், இயல்பு, கதைக்கு பெரிய பலம்.
நடைமுறை வாழ்க்கையை எதார்த்தமான முறையில் சொல்லி இருக்கும் இயக்குனர் சுரேஷ் மாரிக்கு பாராட்டுகள்.
ஜே பேபி ஜே ஜே