ரெபல் விமர்சனம்

மூணார் பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் கூலித் தொழிலாளிகளாக வாழ்ந்து வரும் தமிழர்களான சுப்பிரமணிய சிவாவின் மகனாக வரும் ஜிவி பிரகாஷும் அவரது நண்பராக வரும் ஆதித்யா பாஸ்கரும் அரசினர் கல்லூரியில் இடம் கிடைத்து பட்டப்படிப்பு படிப்பதற்காக பாலக்காட்டுக்கு அருகில் உள்ள சித்தூர் வருகிறார்கள்.
மலையாளிகளே பெரும்பான்மையாக ஆக்கிரமித்து இருக்கும் அந்தக் கல்லூரியில் தமிழர்களுக்கான ஹாஸ்டல் வசதி உள்ளிட்ட அனைத்துமே சற்று தரம் குறைவாக இருப்பதுடன் மாணவர்களுக்கான எந்த அடிப்படை வசதியும் உரிமையும் இல்லாமல் அவர்கள் ‘ராகிங்’ என்ற கொடுமைக்கு ஆளாகின்றனர்.
கேரளாவில் மாறி மாறி ஆளும் இரண்டு பெரிய கட்சிகளை சேர்ந்த மாணவர்கள் இரண்டு பிரிவாக பிரிந்து கல்லூரியில் மாறி மாறி பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.இவர்களுக்கிடையில் சிக்கி அல்லல் படும் தமிழ் மாணவர்கள் பலர் இனி படிப்புக்கு வழியில்லை என்று ஓடிவிடுகின்றனர் இந்த நிலையில்,ஜிவி பிரகாஷும் ஆதித்யா பாஸ்கரும் எப்படியாவது படித்துப் பட்டம் பெற்றே ஆக வேண்டும் என்று நினைக்கின்றனர்.
இந்த நிலையில் மலையாள மாணவர்களின் அத்துமீறலில் ஆதித்யா பாஸ்கர் ஒரு கட்டத்தில் கொல்லப்படுகிறார் இனி அடங்கிக் கிடந்தால் ஆகாது என்று பொங்கி எழும் ஜிவி பிரகாஷ் தங்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராகக் கிளம்புகிறார். அதன் முடிவு என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
மாணவர் வேடத்தில் ஒரு தொழிலாளியின் மகன் என்கிற அளவிலும் கனகச்சிதமாக பொருந்துகிறார் ஜிவி பிரகாஷ்.
நாயகியாக நடித்திருக்கும் மமிதா பைஜூ சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
கருணாஸ்,சுப்பிரமணிய சிவா,வினோத், ஆதித்யா பாஸ்கர்,ஆண்டனி வெங்கடேஷும்,ஷலு ரஹீமும் ஆகிய பிற பாத்திரங்களும் அவர்கள் பணியினை சிறப்பாக செய்துள்ளனர்.
அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவும் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.
இயக்குனர் நிகேஷ் ஆர் எஸ் அவர்களின் திரைக்கதை அருமை.
ரெபல் உரிமை போராட்டம்.