
பெற்றோரினாலும் சமுதாயத்தினாலும் கைவிடப்பட்டு அனாதைகளாக நடுத்தெருவில் நிற்கும உடன்பிறந்தவர்களான யாஷ் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் அனாதைகளாக கோவாவில் நிற்கிறார்கள் இந்நிலையில் தனது தம்பியை கோவா உலகத்திற்கே ராஜாவாக ஆக்க வேண்டும் என்பதே அக்காவின் தீவிர லட்சியம்.அந்த லட்சிய வெறியோடு கோவாவின் நிழல் உலகிற்குள் நுழையும் இருவரும் அங்கு சட்டவிரோதமாக நடக்கும் அபின் வர்த்தகத்தைக் கைப்பற்ற போராடுகிறார்கள்.அங்குள்ள டான் டாரெல் டிஸில்வா மகள் தாரா சுதாரியா திருமணம் செய்ய நிச்சயிக்கப்படும் நிலைக்கு யாஷ் உயர்கிறான்.ஆனால் எதிர்பாராதவிதமாக கியாரா அத்வானி என்ற சர்க்கஸ் கலைஞர் யாஷ் வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள். அவள் மீது யாஷ்க்கு காதல் அரும்புவதோடு சட்டவிரோத கும்பலின் அதிகாரப் போட்டியிலும் பெரும் விரிசல் ஏற்படுகிறது. திடீரென நயன்தாரா மர்மமான முறையில் கொல்லப்பட அந்தப் பழி கியாரா அத்வானி மீது விழுகிறது.உடன்பிறந்த சகோதரியின் மறைவால் உடைந்துபோகும் யாஷ் இரக்கமற்ற கொடூரமான குற்றவாளியாக மாறுகிறான்.1967-ஆம் ஆண்டு வாக்கில் மக்காவு வரை பரவும் இந்த நிழல் உலக மோதலில் யாஷ்ஷின் கடந்த காலத்தின் உண்மைகளும் அவனது கைவிடப்பட்ட மகன் இன்னொரு யாஷ் என்பவனின் வருகையும் கதையை வேறு ஒரு கோணத்திற்கு நகர்த்துகிறது. இறுதியில் சகோதரியின் மரணத்திற்கு பின்னணியில் உள்ள அதிர்ச்சி தரும் மர்ம முடிச்சுகள் அவிழ்ந்ததா என்பதே மீதிக்கதை.
யாஷ் ராயா,டிக்கெட் ஆகிய இரு கதாபாத்திரத்தில் மாஸ் ஹீரோவாக வலம் வந்துள்ளார்.
கங்காவாக நயன்தாரா ஒரு பவர்ஃபுல் சகோதரியாகத் தனது வழக்கமான கம்பீரத்தையும் ஆளுமையையும் நேர்த்தியாகப் பதித்துள்ளார்.
மற்றும் கியாரா அத்வானி,தாரா சுதாரியா,ஹுமா குரேஷி,ருக்மணி வசந்த் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவும்,இசையமைப்பாளர்கள் ரவி பஸ்ரூர்,விஷால் மிஸ்ரா,தனிஷ்க் பாக்சி ஆகியோரின் இசையும் கதைக்கு பலம்.
சுதந்திரத்திற்கு முந்தைய கோவா நிழல் உலகத்தை மையமாகக் கொண்டு பிரம்மாண்டமான கதைக்களத்தை கையில் எடுத்து சிறந்த முறையில் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ள இயக்குனர் கீது மோகன்தாஸ் பாராட்டுககுரியவர்.
டாக்ஸிக் பிரமாண்டம் நிறைந்தது.
