சின்ன வயதில் இருந்து தன் மீது அதீத அன்பு வைத்த தாய் அடிக்கடி தந்தையிடம் வாக்குவாதம் செய்து சண்டையிட திடீரென ஒரு நாள் தன்னையும் தன் அக்காவையும் தவிக்க விட்டுவிட்டு வேறு ஒரு நபருடன் தன் தாய் சென்று விடுகிறாள்.ரியோ ராஜ் தனது வாலிப பருவத்தில் அவரது குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு,இதன் காரணமாக கல்யாணம், குழந்தைகள்,குடும்பம்,இவற்றின் மீது துளியும் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்.ரியோ ராஜ் ஆனால்,அவரது காதலி கோபிகா ரமேஷ் ரியோ ராஜ் கருத்துக்கு நேர் எதிரானவர். கோபிகா ரமேஷ் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி கேட்க்கும் போது, ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து செல்கிறார்கள்.இச்சூழ்நிலையில் கோபிகா ரமேஷ் அவளுடைய பிறந்த நாளில் படுக்கையறையில் ரியோ ராஜ் உடன் ஒரு நெருக்கமான சூழ்நிலையில் இருப்பதை பார்த்து அவர்களின் பெற்றோர்கள் நிலைகுலைந்து போகிறார்கள். வீட்டில் சிறை கைதி போல் இருந்த கோபிகா ரமேஷ் ஒரு கட்டத்தில் கர்ப்பமானது தெரிய வருகிறது.இதனால் ரியோ ராஜ் அதிர்ச்சி அடைகிறார். கமிட்மென்ட் உறவுகளை விரும்பாத ரியோ ராஜ் கோபிகா ரமேஷிடம் கருவை கலைத்து விடும்படி சொல்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் இருவரும் நடிப்பில் அசத்தி உள்ளனர்.
ஏனைய கதா பாத்திரங்களான அருணாச்சலேஸ்வரன்,பௌசி,ரெஞ்சி பணிக்கர்,ரெடின் கிங்ஸ்லி,சுரேஷ் சக்கரவர்த்தி,துளசி உள்ளிட்ட அனைவரது நடிப்பும் அனைவரது கவனத்தை பெறுகிறது.
யுவன் ஷங்கர் ராஜா இசை,பாலாஜி சுப்ரமணியம் ஒளிப்பதிவு,எடிட்டர் தமிழரசன் படத்தொகுப்பு,சிவா சங்கரின் கலை இயக்கம் படத்திற்கு பலம்.
எமோஷனலான ஒரு கதையை காமெடி கலந்த திரைக்கதை அமைத்து இயக்கி உள்ளார் அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ்.சுகுமார் அவர்களுக்கு பாராட்டுகள்.
ஸ்வீட் ஹார்ட் காமெடி வித் ரொமான்டிக் கலந்த ஸ்வீட்.
