kollywood news

10 ஹவர்ஸ் விமர்சனம்

பத்து மணிநேரத்தில் இன்ஸ்பெக்டர் சிபிசத்தியராஜ் காணாமல்போன பெண்ணை கண்டுபிடிக்க துரித நடவடிக்கையில் இறங்குகிறார். தனது மகளை காணவில்லை என்று போலீசில் புகார்தருகிறார் பெண்ணின் தாய்.அதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் சிபிசத்தியராஜ் காணாமல்போன பெண்ணை கண்டுபிடிக்க துரித நடவடிக்கையில் இறங்குகிறார். வாக்கி டாக்கி மூலம் சக போலீஸ் டீமை அலர்ட் செய்து ஆங்காங்கே வாகன சோதனைக்கு ஏற்பாடு செய்கிறார். பெண் எப்படி காணாமல் போயிருப்பார் என்று படிப்படியாக நகர்வுகளை புத்திசாலித்தனமாக நகர்த்தி செல்கிறார்.அவ்வாறு நகர்த்தி செல்லும் போது பல அதிர்ச்சியான தகவல்கள் தெரிய வருகிறது. அந்த பெண்ணை கண்டுபிடிக்க முடிந்ததா,யார் அந்த பெண் எதர்க்கு அவளை கடத்தினார்கள் அதற்குப் பின்னால் என்ன மர்மம் அடங்கி இருக்கிறது அதிர்ச்சியான தகவல்கள் என்ன வெளியாகியது என்பதே படத்தின் மீதிக்கதை.
சிபி சத்யராஜ் காஸ்ட்ரோ என்ற கதாபாத்திரத்தில் அவர் தனது தனித்தன்மையை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்.
ஏனைய கதாபாத்திரங்களான கஜராஜ், ஜீவா ரவி,ராஜ் ஐயப்பா,முருகதாஸ், திலீபன்,தங்கதுரை,சரவண சுப்பையா, சருமிஷா,நிரஞ்சனா ஆகியோர் அவர்களது பணியினை சிறப்பாக செய்துள்ளனர்.
கே எஸ் சுந்தரமூர்த்தி அவர்களின் இசையும்,ஜெய் கார்த்திக் அவர்களின் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப் பெரிய பலம்.
எதிர்பார்க்காத டிவிஸ்ட்டுகளை வைத்து படத்தின் திரைக்கதையை மிகவும் நேர்த்தியான முறையில் நமக்கு தந்த இயக்குனர் இளையராஜா கலியபெருமாள் அவர்களுக்கு பாராட்டுகள்.
10 ஹவர்ஸ் நம்பகத்தன்மையான கிரைம் த்ரில்லர்.

Get real time updates directly on you device, subscribe now.