சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் விமர்சனம்

ஒரு பத்திரிகை எழுத்தாளரின் மகன் நாயகன் வெற்றியை மறைந்த பிரபல கிரைம் நாவல் எழுத்தாளரின் வாழ்க்கையையும் படைப்புகளையும் வெளியிட நேர்காணலுக்கு சென்னைக்கு அழைக்கின்றனர்.தன் தந்தையைப் பற்றிச் சொல்ல சென்னை வரும் வெற்றி அங்கு பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஷில்பா மஞ்சுநாத்தை சந்திக்கிறார்.ஷில்பா மஞ்சுநாத்தும் அந்தத் தொடரை எழுதுகிறார்.அதேசமயத்தில் அங்கே சில சந்தர்ப சூழ்நிலைகளால் திருடன் கிங்ஸ்லி மூலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தம்பி ராமையாவின் அறிமுகம் கிடைக்கிறது. போலீஸ் இன்ஸ்பெக்டர் தம்பிராமையா வெற்றியின் துப்பறியும் திறனால் ஈர்க்கப்பட்டு அவரை பாராட்டுகிறார். இந்நிலையில்,தமிழகத்தின் வெவ்வேறு பகுதியில் மாணவ,மாணவிகள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த தொடர் கொலைகளின் குற்றவாளியை கண்டுபிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் தம்பிராமையா களம் இறங்குகிறார்.தனக்கு உதவியாக வெற்றியை வைத்துக் கொண்டு விசாரணையை தொடங்குகிறார். தனது தந்தை ஒரு க்ரைம் எழுத்தாளர் என்பதால் தனக்கு இயல்பாகவே இருக்கும் புலனாய்வுத் திறனை பயன்படுத்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் தம்பிராமையாவுக்கு வெற்றி உதவிகள் செய்கிறார்.இதற்கிடையே போலீஸ் இன்ஸ்பெக்டர் தம்பிராமையாவின் மகள் எதிர்பாராவிதமாக தற்கொலை செய்து கொள்கிறார்.அவள் ஏன் தற்கொலை செய்கிறாள் வெற்றி இந்த வழக்கின் மர்மங்களை எப்படி அவிழ்க்கிறார் கொலைகாரன் யார் அவன் ஏன் இந்த கொலைகளை செய்கிறான் என்பதே படத்தின் மீதிக்கதை.
வெற்றி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி யுள்ளார்.
நாயகியாக ஷில்பா மஞ்சுநாத்துக்கு பெரிய அளவில் படத்தில் வாய்ப்பு இல்லை என்றாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி உள்ளார்.
மற்றும் தம்பி ராமையா,மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் அவர்களுக்கு கொடுத்த பாத்திரத்தை நன்றாக செய்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் அரவிந்த் அவர்களின் ஒளிப்பதிவும்,இசைமைப்பாளர் ஏ.ஜே.ஆர் அவர்களின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.
இயக்குனர் அனீஷ் அஷ்ரஃப் சைக்கோ த்ரில்லர் கதையை சுவாரஸ்யமான திரைக்கதையை உருவாக்கியுள்ளார் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.
சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் த்ரில்லர்வ வரிசை கதைகளில் ஒன்று.