அக்யூஸ்ட் விமர்சனம்

நாயகன் உதயா பிரபல அரசியல் கட்சி மாவட்ட செயலாளர் கொலை செய்த வழக்கில் விசாரணைக்காக புழல் சிறையிலிருந்து சேலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக அழைத்து செல்லும் மூன்று போலீஸ்காரர்க​ளில் ஒருவர் கான்ஸ்டபிள் அஜ்மல்.மிகுந்த எச்சரிக்கையுடன் அழைத்துச் செல்கின்றனர்.கைதி உதயாவை கொலை செய்ய போலீஸ் வாகனத்தை தாக்கும் ஒரு ரவுடி கும்பலிடமிருந்து உதயாவை மீட்டு வேலூரில் உள்ள ஒரு ஊரில் தங்க வைக்கிறார் அஜ்மல்.ரவுடிகளிடமிருந்து தப்பித்தாலும்,அந்த ஊரில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி உதயாவை என்கவுன்டரில் சுட்டு தள்ள முயற்சி செய்வதை அறிந்து கொள்கிறார் அஜ்மல்.உதயாவை காப்பாற்ற முடிவெடுக்கும் அஜ்மல் ரவுடி கும்பல், போலீஸ் என்கவுண்டர் ஆகியவற்றிலிருந்து எப்படி வியூகம் வைத்து உதயா தப்பிக்க உதவினார் ரவுடி கும்பலை அனுப்பியது யார் அரசியல்வாதி கொலையானது எதற்காக யார் கொன்றனர் அதற்கான மர்ம பின்னணி என்ன போலீஸ் தீவிரமாக உதயாவை என்கவுண்டர் செய்ய தேடுவது ஏன் போலீசின்அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் இறுதியில் சாதாரண கான்ஸ்டபிள் அஜ்மலால் சேலம் நீதிமன்றத்தில் உதயாவை ஆஜர் படுத்த முடிந்ததா என்பதே படத்தின் மீதிக்கதை.
ரவுடி கணக்குவாக உதயா அவருடைய நடிப்பை சிறப்பான முறையில் வெளிப்படுத்தியுள்ளார்.
கான்ஸ்டபிள் வேந்தனாக அஜ்மல் தனது அழுத்தமான நடிப்பால் அனைவரது கவனத்தையும் கவர்கிறார்.
மற்றும் யோகிபாபு,ஜான்விகா கலகேரி, சாந்திகா,பவன்,தயா பனீர் செல்வம், ஸ்ரீதர்,பிரபு ஸ்ரீனிவாஸ்,பிரபு சாலமன், சங்கர் பாபு,ஜெயக்குமார்,தீபா,சுபத்ரா, அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா மற்றும் பலர் படத்திற்கு மிகப் பெரிய பலம் சேர்த்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் மருதநாயகம் அவர்களின் ஒளிப்பதிவும் நரேன் பாலகுமார் அவர்களின் இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
சுவாரஸ்யம் குறையாத திரைக்கதையமைத்து தோய்வு இல்லாத வகையில் அழுத்தமான பதிவாக கொடுத்து அசத்தியுள்ள இயக்குனர் பிரபு ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கு பாராட்டுகள்.
அக்யூஸ்ட் சுவாரஸ்யமான யதார்த்தமான நகைச்சுவை நிறைந்த த்ரில்லர்.