
ஹனுமான் வெற்றிக்கு பிறகு வேதா பிரஜபதி என்ற புதிய அவதாரத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் மிராய்.
பேரரசர் அசோகா அழியாத சக்தி இரகசியத்தை ஒன்பது புனித புத்தகங்களாக பதிவிட்டு, அவற்றை மிகவும் விசுவாசமான பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கிறார். பல தலைமுறைகள் கடந்த பிறகு, 2000 ஆம் ஆண்டில், ஒன்பதாவது புத்தகத்தின் பாதுகாவலராக எதிர்காலத்தை கணிக்கும் திறனுடன் ஆசீர்வதிக்கப்பட்ட திறமை மிகுந்த பெண் ஸ்ரேயா சரண் சுற்றிய கதைக்களம. இந்நிலையில் சிறு வயதில் ஒதுக்கப்பட்டு, அவமானத்திற்குள்ளாகி பல தந்திர வித்தைகளை கற்று,தீய எண்ணத்துடன் வளர்ந்து உலகத்தையே தன் கைக்குள் வைத்துக் கொண்டு ஆட்டி படைக்க நினைத்து ஒன்பது அரிய புனித புத்தகங்களை அடைய மஞ்சு மனோஜ் ஆசைப்படுகிறார்.மஞ்சு மனோஜ் தன்னுடய தந்திர மாய வித்தைகள் செய்யும் பிளாக் வாளை பயன்படுத்தி, ஏழு புத்தகங்களை கைப்பற்றி அதனை பாதுகாக்கும் பாதுகாவலர்களை அழித்து எழுச்சியுடன் முன்னேறி வருகிறார். இதை பல ஆண்டுகளுக்கு முன்னரே தன்னுடைய அறிவு திறமையால் அறிந்துக் கொள்ளும்நிறைமாத கர்ப்பிணியான ஸ்ரேயா சரண் அவரை அழிக்க ஒரே வழி தன் மகன் தான் என தெரிந்துக்கொள்கிறார். அதற்காக தன் குழந்தை பிறந்த பிறகு தாய் பாசம் இல்லாமல் அனாதையாக விட வேண்டும், கடைசியாக அந்த 9வது புத்தகத்தை வில்லன் அடைய வரும் போது தன் மகன் ராமரின் ஆயுதமான மிராய்யை அடைந்து வில்லனை அழிக்க வேண்டும் என்ற விதியை இமாலயத்துறவி மூலம் அறிந்து கொள்கிறார். அதன்படியே மகன் தேஜா சஜ்ஜா பிறந்த பிறகு அனாதையாக வாரணாசியில் விட்டு விடுகிறார். 24 வருடங்கள் தன் மனம் போனபடி சுற்றித் திரிந்து வளரும் தேஜா சஜ்ஜா பல மாநிலங்களை கடந்து இறுதியாக ஹைதராபாத்தில் வித்தியாசமான பொருட்களை செய்து விற்பனை செய்யும் தொழிலை செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இதனிடையே ஸ்ரேயா சரண் வாழ்ந்த இடத்திலிருந்து ரித்திகா நாயக் என்ற இளம் துறவி ஒன்பதாவது புத்தகத்தை கைப்பற்ற மஞ்சு மனோஜ் சில வாரங்களுக்குக்குள் வருவதை அறிந்து, தேஜா சஜ்ஜாவை தேடி அலைந்து கண்டுபிடிக்கிறார். நடக்க போகும் விபரீதத்தை விவரிக்க முயற்சிக்கும் போதெல்லாம் அதை கிண்டலாக கடந்து போகிறார் தேஜா. பல விபரீத நிகழ்வுகளுக்கு பிறகு உண்மையான காரணத்தை அறிந்து அவர் மிராய்யை தேடி இமயமலைக்கு செல்கிறார். இறுதியில் தேஜா கையில் மிராய் கிடைத்ததா மஞ்சு மனோஜை அழிக்க முடிந்ததா புனித புத்தகங்கள் உண்மையிலேயே தோன்றும் அளவிற்கு சக்திவாய்ந்தவையா மஞ்சு தன் சக்திகளை பயன்படுத்தி வெற்றி கண்டாரா ரித்திகா நாயக் என்ன ஆனார் மிராய்க்கும் பிளாக் வாளுக்கும் நடக்கும் கடைசி யுத்தம் என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.
தேஜா சஜ்ஜா உறுதியான கொள்கையுடன் மாறும் சக்தி மிகுந்த இளைஞனாகவும் இரண்டு வித கோணங்களில் தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
மஞ்சு மனோஜ் தோன்றும் ஒவ்வொரு காட்சியையும் தன்னுடைய இருப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
மற்றும் ஸ்ரேயா சரண்,ரித்திகா நாயக்,ஜெயராம்,ஜகபதி பாபு,கெட்டப் சீனு மற்றும் பலர் படத்தின் காட்சிகளுக்கு நடுவே திருப்புமுனை கதாபாத்திரங்களாக தங்களுடைய திறமையான தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கினறனர்.
கௌரா ஹரியின இசையும்,கார்த்திக் கட்டம்னேனியின் கதை,ஒளிப்பதிவு,இயக்கமும் பிரம்மாண்டத்துடன் பிரமிக்க வைத்துள்ளது.
மிராய் மிரட்டல்.
