கைதி’,‘மாஸ்டர்’,‘விக்ரம்’,‘போர்’, ‘ரசாவதி’,‘அநீதி’,குட் பேட் அக்லி’ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வலம் வரும் அர்ஜுன் தாஸ்,இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து தற்போது வெளிவந்துள்ள உள்ள படம் ‘பாம்’.காமேடி ஜேர்னரில் வெளிவந்துள்ள பாம் படத்தில் அவர் “மணிமுத்து” என்ற கதாபாத்திரத்தில் ஒரு கிராமத்து இளைஞனாக, தனது தனித்துவமான குரல் வளத்தாலும், உடல்மொழியாலும் கதைக்கு ஏற்ப நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி குணச்சித்திர நடிகராக புது அவதாரத்தில் தன்னை நிலைநிறுத்தி கொண்டு பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார்.பாம் படத்தின் மூலம் அர்ஜுன் தாஸ், தன்னை ஒரு கமர்ஷியல் ஹீரோவாகவும், சிறந்த குணச்சித்திர நடிகராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார் என்பது தான் நிஜம்.அர்ஜுன் தாஸ் அவர்களுக்கு பாராட்டுகள், வாழ்த்துக்கள்.
