மெஸன்ஜர் விமர்சனம்

கதையின் நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் காதல் தோல்வி காரணமாக தற்கொலைக்கு முயற்சிக்கிறார்.அப்போது அவரது மெஸன்ஜரில் ஒரு பெண் மெசேஜ் அனுப்பி அதை தடுக்கிறாள்.அவளுக்கு எப்படி தான் தற்கொலை செய்ய போவது தெரியும் என அவளிடமே மெசேஜ் செய்து கேட்க,அதற்கு அவள் தான் 2 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டதாக சொல்கிறார்.இறந்த விட்ட பெண்ணொருவர் தன் உயிரைக் எப்படி காப்பாற்றினார்,அந்தப் பெண் யார்,எதற்காக அவர் இறந்தார் என்று தேடுகிறார் ஸ்ரீராம் கார்த்திக்.முடிவில் தேடிக்கண்டுபிடித்தாரா பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
ஸ்ரீராம் கார்த்திக் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
மனீஷா ஜஸ்னானி தனது வசீகர நடிப்பில் பிரகாசிக்கிறார்.
ஏனைய கதாபாத்திரங்களான ஃபாத்திமா நஹீம்,வைசாலி ரவிச்சந்திரன், லிவிங்ஸ்டன்,பிரியதர்ஷினி ராஜ்குமார், ஜீவா ரவி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
பால கணேசன் ஒளிப்பதிவும்,அபு பக்கர் இசையும் கதைக்கு கூடுதல் பலம்.
இதுவரை யாரும் கண்டிராத ஆவியுடனான கற்பனை கலந்த ஒரு காதல் கதையை மிகவும் வித்தியாசமான முறையில் சொல்லியுள்ள இயக்குனர் ரமேஷ் இளங்கமணியை பாராட்டியே ஆகவேண்டும்.
மெஸன்ஜர் இளைஞர்களுக்கு நல்ல ஒரு மெசேஜ்.