மாஸ்க் விமர்சனம்

கதையின் நாயகன் கவின் அதிகமாக பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையில் அடுத்தவர் வாழ்க்கையை ஹேக் செய்யும் ஒரு டிடெக்டிவ்வாக நடித்துள்ளார். ஆண்ட்ரியா ஜெரிமியா ஒரு என்.ஜி.ஓ நிறுவனம் நடத்திவருகிறார்,அதில் ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்கிறார், அதே நேரத்தில் அவர்களைக் கட்டுப்படுத்தவும் பயன்படுத்துகிறார். குழந்தைகளை மீட்டு தனது கட்டுப்பாட்டின் கீழ் மிகவும் விசுவாசமான பாலியல் தொழிலாளர்களாக மாற்றுகிறார்,அதே நேரத்தில் அவர்களை அரசியல்வாதி பவன் கிருஷ்ணா உட்பட மிகவும் சக்திவாய்ந்த ஆண்களுக்கு எதிராக பயன்படுத்துகிறாள். கூட்டணி இல்லாமல் தனியாக தேர்தலில் நிற்கும் பவன் கிருஷ்ணா வரவிருக்கும் தேர்தலுக்கு செலவு செய்ய ரூ.440 கோடி பணத்தை ஆண்ட்ரியா மூலம் அந்தந்த தொகுதிகளுக்கு விநியோகம் செய்ய ஏற்பாடு செய்கிறார்.முகமூடி அணிந்த ஒரு கொள்ளைக் கும்பல் ஆண்ட்ரியாவுக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து இந்த 440 கோடி ரூபாயை கொள்ளை அடிக்கிறது. ஆண்ட்ரியா கவின் டிடக்டிவ் என்பதால் அவரையும் அவரது குடும்பத்தையும் மிரட்டி கொள்ளையடிக்கப்பட்ட 400 கோடி ரூபாய் கண்டுபிடிக்கும்படி கட்டாயப்படுத்துகிறார். முகமூடி அணிந்து இந்தக் கொள்ளையை நடத்தியது யார் எதற்காக கொள்ளை அடித்தார்கள் ஆண்ட்ரியாவின் பின்னணி என்ன கவின் கொள்ளையடிக்கப்பட்ட அந்த 440 கோடி ரூபாயை கண்டு பிடித்தாரா கவினை அவரது குடும்பத்தை வைத்து ஆண்ட்ரியா எதற்காக மிரட்டினார் என்பதே படத்தின் மீதிக்கதை.
கவின் வித்தியாசமான கதாபாத்திரத்தில் எதார்த்தமாக நடித்துள்ளார்.
ஆண்ட்ரியா ஜெரிமியா இதில் ஒரு தயாரிப்பாளராகவும்,பயமுறுத்தும் வில்லியாக வலம் வந்துள்ளார் வாழ்த்துக்கள்.
மற்றும் ருஹாணி ஷர்மாவின்,சார்லி, ரமேஷ் திலக்,கல்லூரி வினோத்,அர்ச்சனா சந்தோக்,ரெடின் கிங்ஸ்லீ,பவன்,ஆடுகளம் நரேன்,சுப்ரமணியம் சிவா,ரோகித் டெனிஸ், வெங்கட் பேட்டரி,மகாலட்சுமி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசை மற்றும் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் அவர்களின் ஒளிப்பதிவு கதைக்கு கூடுதல் பலம்.
விறுவிறுப்பான பொழுதுபோக்கு அம்சங்களுடன் திரைக்கதை அமைத்து வெகு நேர்த்தியாக கதையை நகர்த்தியுள்ள அறிமுக இயக்குனர் விகர்ணன் அசோக் அவர்களுக்கு பாராட்டுகள்.

‘மாஸ்க்’ மாஸ்.