தீயவர் குலை ந​டுங்க விமர்சனம்

கதையின் நாயகன் அர்ஜூன் எழுத்தாளர் லோகு கொலை வழக்கை விசாரிக்க போலீஸ் அதிகாரியாக களமிறங்குகிறார்.அவரது விசாரணையின் போது எழுத்தாளர் லோகு கொலையாவதற்கு முன்‘காவேரி கரை’என்கிற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி வைத்திருப்பதும்,அதன் பின்பக்க அட்டையில் ஒரு அபார்ட்மெண்ட்டின் பெயர் இடம்பெற்றிருப்பது காண்டுபிடிககின்றார். அந்த அபார்ட்மெண்ட் லோகுவின் நண்பர் கட்டுமான தொழிலதிபர் ராம்குமார் கணேசனுக்கு தொடர்புடையது என்பதை அறிந்து,அர்ஜுன் அந்த அபார்ட்மெண்ட்டிற்கு சென்று அவரிடம் தன் விசாரணை தொடங்குகிறார். அதை தொடர்ந்து தொழிலதிபரான ராம்குமார் கணேசனுக்கு மர்ம நபரால் கொலை செய்யப்படுகிறார். பிறகு அந்த அபார்ட்மெண்ட்டில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடக்கிறது.அதை தொடர்ந்து தன் விசாரணையை தீவிரப்படுத்தும் போது, அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த ஒரு சம்பவத்துக்கும் இந்த கொலைகளுக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடிப்பதுடன், அர்ஜுனின் பார்வை ஐஸ்வர்யா ராஜேஷ் பக்கம் திரும்புகிறது. தீவிர விசாரணையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் அந்த முகமூடி கொலையாளி என்பதை ஊர்ஜிதம் செய்கிறார்.அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த அந்த சம்பவம் என்ன எழுத்தாளர் லோகுவின் ‘காவேரி கரை’ புத்தகத்தில் என்ன எழுதியிருந்தது ஐஸ்வர்யா ராஜேஷ் யார் இவருக்கும் இந்த கொலைகளுக்கும் என்ன தொடர்பு போலீஸ் அதிகாரி அர்ஜுன் எப்படி கொலையாளியை கண்டுபிடித்தார் இறுதியில் அவர்கொலையாளியை என்ன செய்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.
ஆக்ஷன் கிங் அர்ஜுன் போலீஸ் அதிகாரி மகுடபதி கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் முக்கிய சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பு வெளிப்படுத்தி இருக்கிறார்.
மற்றும் அபிராமி வெங்கடாசலம்,பிரவீன் ராஜா,ராம்குமார்,லோகு, ஆட்டிசம் பாதித்த குழந்தை அனிகா,வேல ராமமூர்த்தி, தங்கதுரை,ராகுல்,பிரியதர்ஷினி,சையத், ஜி.கே.ரெட்டி,பி.எல்.தேனப்பன், ஓ.ஏ.கே.சுந்தர்,பத்மன் உட்பட அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களுக்கு வலுவூட்டி நடித்துள்ளனர்.
பாரத் ஆசீவகன் இசை மற்றும் ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் பழிவாங்கும் கதையை மையமாக வைத்து,விறுவிறுப்பான கிரைம் சஸ்பென்ஸ் த்ரில்லராக திரைக்கதை அமைத்து படத்தை இயக்கியிருக்கும் இயக்குனர் தினேஷ் லட்சுமணன் அவர்களுக்கு பாராட்டுகள்.
தீயவர் குலை நடுங்க தீயவர்களை குலை நடுங்க வைக்கும் த்ரில்லர்.