கதையின் நாயகன் மகேந்திரா,நாயகி நீமா ரே யூடியுப்,இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எல்லை மீறும் பதிவுகளால் பாதிக்கப்பட்ட ஒருவனிடம் ஏற்காடு பகுதியிலுள்ள அடர்ந்த காட்டில் இருவரும் சிக்கி கொள்கிறார்கள்.அந்த சைக்கோ கொலையாளியிடம் இருந்து இருவரும் தப்பித்தார்களா,இல்லையா இவர்களால் அந்த கொலையாளி எப்படி பாதிக்கப்பட்டார் என்பதை விளக்குவதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் மஹேந்திரன்,நாயகி நீமா ரேய், சைக்கோ கொலையாளியாக இயக்குனர் சிக்கல் ராஜேஷ் ஆகியோர் இயல்பான நடிப்பு வெளிப்படுத்தி எதார்த்தமாக நடித்துள்ளனர்.
மேலும் ஏனைய கதாபாத்திரங்களான நிழல்கள் ரவி,அஸ்மிதா,கும்தாஜ்,சேரன் ராஜ்,சிசர் மனோகர்,ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஏ.எம் அசார் இசையும், ஒளிப்பதிவாளர் பாஸ்கர் அவர்களின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம்.
இன்றைய தலைமுறையினர்கள் சோஷியல் மீடியாவில் அக்கறையற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்து சரியான பாடம் கற்பிக்கும் வகையில் சொல்லியிருக்கும் இயக்குனர் சிக்கல் ராஜேஷ் அவர்களுக்கு பாராட்டுகள்.
இரவின் விழிகள் அனைவருக்கும் சரியான
படமும்,பாடமும்.
