LSS (Love – Share – Subscribe) விமர்சனம்

நாயகன் ஆதவ் கிருஷ்ணா சென்ன கல்லூரி ஒன்றில் நன்றாக படிக்கும் மாணவன் அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரரின் மகளான சிம்ரன் அத்வானியை ஒரு ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறான்.அதன் பின் தன்னுடைய அன்றாட கல்லூரி சம்பந்தப்பட்ட வேலைகளை பார்த்துக் கொண்டும் தான் உண்டு தன் படிப்பு உண்டு என்று இருக்கும் ஆதவ் கிருஷ்ணாவை பார்த்தவுடன் சிம்ரனுக்கு பிடித்து விடுகிறது.பெண்களிடம் கன்னியமாக பழகும் குணத்தை கண்டும்,ஆதவின் நேர்மையையும்,துணிச்சலையும் கண்டு சிம்ரன் ஒரு தலையாக காதலிக்கிறாள்.முதலில் காதலில் விருப்பம் இல்லாத ஆதவ் பின்னர் காதலிக்க தொடங்க இவர்களது காதல் ஆரம்பத்தில்கலகலப்பாகவும் இளமைத் துடிப்புடனும் நகர்கிறது.இதனிடையே இவர்களது காதலுக்கு ஆதவின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்க சிம்ரனின் குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.சிம்ரனின் பெற்றோர்கள் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.சிம்ரனின் தாய் வாரணாசியில் தனியாக வசித்து வருகிறார்.தன் தந்தை மற்றும் பாட்டியுடன் வாழும் சிம்ரனிற்கு தன் தாயை சந்தித்து காதலை சொல்லி ஆசிர்வாதம் பெற விருப்பம் இதற்கு அவரது தந்தை எதிர்ப்பு தெரிவிக்க அவருக்கு தெரியாமல் தனது காதலனுடன் சேர்ந்து தன் தாயை காண வாரணாசி செல்கிறாள்.வாரணாசியில் புனிதமான கங்கை கரையில் அவர்கள் தங்களது காதல் பயணத்தைத் தொடங்க ஒட்டலில் தங்கும் இருவரும் வாரணாசியை சுற்றி பார்க்கின்றனர்.இந்நிலையில் காதலனை தவிர்த்து தாயின் அழைப்பின் பேரில் தனியாக செல்லும் சிம்ரன் அங்கு எதிர்பாராத விதமாக ஒரு பயங்கர விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்து‘மூளைச் சாவு’ நிலைக்குச் செல்கிறார்.அவரது போன் சுவிட்ஸ் ஆஃப் ஆகிவிட,அவரை ஒரு சிலர் வாரணாசியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கின்றனர்.இந்தச் சூழலில் இதை அறியாத சிம்ரனுடன் இருந்த ஆதவை சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்கிறார்கள். ஒரு பக்கம் தன் காதலி உயிருக்குப் போராடுகிறாள்,மறுபக்கம் தான் ஒரு குற்றவாளியாகச் சித்திரிக்கப்படுகிறோம் என்ற இக்கட்டான நிலையில் ஆதவ் தவிக்கிறான்.சிம்ரனின் தந்தை மற்றும் அவரது உறவினர் ஆகியோர் வாரணாசிக்கு வருகிறார்கள்.மருத்துவமனையில் சிம்ரனின் நிலை என்னவானது ஆதவ் தன் மீதான பழியைத் துடைத்து காதலியை எப்படிக் காப்பாற்றினார் அந்த மர்மமான விபத்தின் பின்னணி என்ன அதன் பின் காதலர்கள் சேர்ந்தார்களா என்பதே படத்தின் மீதிக்கதை.
ஆதவ் கிருஷ்ணா ஒரு சராசரி இளைஞனின் தவிப்பை தனது நடிப்பால் நன்றாக வெளிப்படுத்தியுள்ளார.
சிம்ரன் அத்வானி தனது துள்ளலான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார்.
மற்றும் படவா கோபி,வினோதினி,ஜாவா சுந்தரேசன்,ரோஹித்,தனஞ்செயன்,முத்து புவன் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
என்.எஸ். சதீஷ் குமார் ஒளிப்பதிவும், அஸ்வமித்ராவின் இசையும் கதைக்கு கூடுதல் பலம்.
ஒரு எளிமையான காதல் கதைக்கு அழுத்தமான திரைக்கதை அமைத்து மிகவும் நேர்த்தியான முறையில் இயக்கியுள்ள இயக்குனர் ஆர்.மகாலட்சுமி முருகனுக்கு பாராட்டுகள்.
LSS காதலுக்கான உணர்ச்சிகரமான போராட்டம்.