காதல் ரீசெட் ரிப்பீட் விமர்சனம்

நாயகி ஜியா சங்கர் ஒரு இசைப் போட்டியில் பங்கேற்பதற்காக தந்தைக்கு தெரியாமல் ஸ்காட்லாந்து சொல்லுகிறார்.அங்கே காதல் தோல்வியால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தனது நினைவாற்றலை இழக்கிறார்.அவருக்கு‘ஆன்டரோகிரேட் அம்னீஷியா’எனும் பாதிப்பு ஏற்படுகிறது அவருக்கு தூங்கி எழுந்தவுடன் ஒவ்வொரு 24 மணிநேரத்திலும் அவளது நினைவுகள் அழிந்துவிடும்.ஜியா சங்கரை ஒரு தலையாக காதலித்து அவளுக்கு பாதுகாப்பாக பின் தொடர்ந்து வரும் சிறுவயது நண்பரான மதும்கேஷ் ஸ்காட்லாந்தின் தனிமையான சூழலில் அவளைப் பராமரிக்கிறார்.தன்னை அதிதியின் காதலன் என்று அவர் அடையாளப்படுத்திக் கொள்ள,மற்றொரு பக்கம் அதிதியின் முன்னாள் காதலரான அர்ஜுன் அசோகன் குறுக்கிடுகிறார். இருவரில் யாரை ஜியா சங்கர் நம்புகிறாள் தனது கடந்த காலம் நினைவுக்கு வந்ததா தனக்காக வாழும் மதும்கேஷ் காதலை புரிந்து கொண்டாரா என்பதே மீதிக்கதை.
படத்தின் நாயகி அதிதியாக ஜியா சங்கர் பல உணர்ச்சிகளைத் தனது நடிப்பில் அழகாக சிறப்பாக வெளிப்படுத்தி அவரது நடிப்பு பாராட்டும்படி நடித்துள்ளார்.
மதும்கேஷ் தனது காதலிக்காக எதையும் செய்யும் தியாகம் மிகுந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.
மற்றும் அர்ஜுன் அசோகன்,எம். எஸ். பாஸ்கர்,விஜி சந்திரசேகர்,ஜெயப்பிரகாஷ் ஆகியோர் ஆகியோர் அவர்களது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையும்,அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலம்.
ஒரு மென்மையான மற்றும் உணர்ச்சிகரமான காதலை சிறந்தத திரைக்கதையாக அமைத்து இயக்கி இருக்கும் இயக்குநர் ஏ.எல். விஜய் அவர்களுக்கு பாராட்டுகள்.
காதல் ரீசெட் ரிப்பீட் உணர்வுகள் நிறைந்த மென்மையான காதல்.