ரவிமரியா எந்தவொரு வேலைக்கும் செல்லாமல் பொதுமக்களின் சின்ன சின்ன பிரச்சன்னைகளுக்காக போராட்டங்கள் நடத்தி அதை யூடியூப் மூலம் பதிவேற்றம் செய்து ஊர்மக்களின் ஆதர்வை வெகுவாக பெறுகிறார்.இதை அறிந்த தொழில் அதிபர் ராதாரவி ரவிமரியாவை ஒரு நடிகராக மாற்றுகிறார்.இதனால் ரவிமரியாவுக்கு ரசிகர்களின் அமோக ஆதர்வு கிடைக்கிறது. இந்த ரசிகர் பட்டாளத்தை ஓட்டாக மாற்றவேண்டும் என்ற எண்னத்தில் ராதாரவி ரவிமரியாவை சந்தித்து நீ ஒரு கட்சி ஆரம்பித்து தேர்தலில் நில் உன்னை இந்த நாட்டின் முதலமைச்சராக அரியாசனத்தில் அமர வைக்கிறேன் என்று தேர்தலுக்கான அனைத்து செலவுகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறுகிறார். ரவிமரியாவும் ராதாரவியின் ஆலோசனைப்படி நடிகராகி அரசியல் கட்சி ஆரம்பித்து தேர்தலில் 164 இடங்களை பிடித்து ரவிமரியா வெற்றியும் பெறுகிறார். ஆனால் அவ்ர் முதலமைச்சராக பதவி ஏற்கவில்லை ஏன் ரவிமரியா முதல் அமைச்சராக பதவி ஏற்கவில்லை என்பதே படத்தின் மீதிக்கதை.
ரவிமரியா இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி படமுழுக்க நகைச்சுவை கதாநாயகனாக அசத்தியிருக்கிறார்.
மற்றும் அக்ஷயா விஜய்,ராதாரவி, பழ.கருப்பையா,நாஞ்சில் சம்பத்,கஞ்சா கருப்பு,இயக்குநர் பேரரசு,அக்னி எஸ்.வருண்,பயில்வான் ரங்கநாதன், இயக்குநர் ரங்கநாதன் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
துளசி ராமனின் இசையும்,கார்த்திக் எஸ் நாயரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.
தற்கால அரசியல் எது என்பதை கையில் எடுத்து சிறந்த திரைக்கதை அமைத்து நகைச்சுவை உணர்வோடு இயக்கி இருக்கும் இயக்குநர் ராம்தேவ் அவர்களுக்கு பாராட்டுகள்.
“மக்கள் தலைவா”நகைச்சுவை அதிகம் கலந்த அரசியல்
